பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. இ. அ. ச. ஞானசம்பந்தன் வானொலிப் பெட்டியை அரிதின் முயன்று வாங்கி இருக் கலாம். அதைத் திருப்பிவிட்டு எதனை வேண்டுமானாலும் கேட்க அவனுக்கு உரிமையுண்டு. அதனை யாரும் தடை செய்யும் உரிமையைப் பெறவில்லை.ஆனால் அதன் சத்தம் அவனளவில் அனுபவிக்கப்படலாமே தவிர,அது எத்துணை உயர்ந்த இசையாயினும் தெருவில் போகின்றவர்களையும். அடுத்த வீட்டுக்காரரையும் தொல்லைப் படுத்துகின்ற அளவுக்கு அதனுடைய சத்தத்தை மிகுதிப் படுத்த வானொலிப் பெட்டிக்காரனுக்கு உரிமை இல்லை. அவன் வாங்கிய வானொலிப் பெட் டியில் அவன் வேண்டும் அளவுக்குச் சத்தம் உண்டாக்க அவனுக்கு உரிமை இல்லையாயென்றால் சமுதாயத்தில் அவன் வாழு கின்றவரை அந்த உரிமை அவனுக்கு இல்லை என்றே கூறல் வேண்டும். சமுதாயத்தில் வாழும்பொழுது தனிமனித உரிமை எத்துணை தூரம் இடம் பெறும் என்பது யார் ஆராய்வது? தத்துவ ஞானியின் பணியன்றோ இது? தனி மனித உரிமைக்கும் சமுதாயத் தேவைக்கும் (individual liberty vs. Social conciousness) @sol_Gul g bli Gib போட்டியில் ஒவ்வொன்றின் உரிமையும் எவ்வளவு என் பதைச் சமுதாயத் தத்துவ வாதி (Social Philosopher) ஆராயவேண்டிய கட்டுப்பாடுடையவன். . . . அறிவின் துணைகொண்டு மட்டும் ஆராய்ந்தால் இத்தகைய வினாக்கட்கு விடை கிடைப்பது கடினம் .கிடைத்தாலும் அது செம்மையான விடையாக இராது. சமுதாயத்தில் வாழும் தனிமனிதனுடைய உரிமை பிறன் ஒருவனுடைய உரிமையில் தலையிடுதல் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை அறிவுறுத்துவதே உள்ளுணர்வுதான். உன்னுடைய தேவை, வேட்கை இன்றியமையாமை என்பன எத்துணைப் பெரிதாக இருப்பினும் அது பிறருடைய உரிமையில் கைவைப்பதாக அமையக்கூடாது என்று உள்ளுணர்வு பேசுகிறது.