பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 15 வார்' என்று ஆசிரியன் கூறினமையால் கழி பெருங்காதல் கொண்டவர்கள் கூட உண்மையில் காதலின் தத்துவத்தை அறிந்திருந்தார்களா என்ற ஐயந் தோன்றுகிறது. காண்ட் (Kant) போன்ற தத்துவ வாதிகள் அழகு பற்றிச் செய்த ஆராய்ச்சியில் அழகு என்பது மலரிடத்தில் உள்ளதா? மனத்திடத்தே உள்ளதா? அது நுண்பொருளா பருப்பொருளா என்பன போன்ற விடை காணமுடியாத புதிர்கள் எல்லாம் நிறைந்துள்ளன. ஒரு சிலவற்றை உணர்ந்து அனுபவிக்க முடியுமே தவிர அறிவின் துணை கொண்டு அறிந்துவிடுதல் முடியாத காரியம். இத்தகையவற்றை அறிவின் துணைகொண்டு ஆராய்ந்து கொண்டு செல்வதால் இறுதியில் என்ன எஞ்சும்? வெங்காயத்தின் தோலை உரித்துக் கொண்டே சென்றால் என்ன எஞ்சுமோ அதுவேதான்! வெங்காயம் என்பது தோலைத் தவிர வேறு இல்லை. அதேபோல அனுபவித்து உணரவேண்டியவற்றை துணைகொண்டு ஆராய முற்படுவது பயனற்ற செயலாய் முடிவதுடன் ஆராய்ச்சிக்கு உரிய பொருளையும் இல்லையாகச் செய்து விடும். மூரின் கொள்கை : இனி ஜி.இ. மூர் என்ற தத்துவ வாதியின் கருத்து நல்லொழுக்கம் சமயம் என்பவை பற்றிய கொள்கைகளை வகுப்பது தத்துவத்தின் பணியன்று என்பதாகும். எக்காரணம் பற்றி மனித வாழ்க்கையோடு பெரிதும் தொடர்பு உடைய இவற்றை அவர்கள் தத்துவ ஆராய்ச்சி யினின்று விலக்கினார்கள் என்று கூறமுடியவில்லை. தனிமனிதனாக வாழும்போது உள்ள மனநிலை, உரிமை முதலியவைகள், சமுதாயத்தில் கூடி வாழும்போது மாறுதலடைகின்றன. உதாரணமாக ஒன்றைக் காண லாம். தனிமனிதன் ஒருவன் ரூ. 500/- செலவழித்து ஒரு