பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 0 அ. ச. ஞானசம்பந்தன் வந்துள்ளது. அன்பு என்றால் என்ன? என்ற வினாவை எடுத்துக்கொண்டு ஆராயத் தொடங்கினால் அது மனித மனதில் தோன்றுகிற ஓர் இயல்பூக்கம் (Instinct) என்று கூறுவர் போலும்! ஆனால் ஏன் அன்பு தோன்றவேண்டும் அது நம்மிடம் தரப்பெற்றதின் நோக்கம் யாது என்பன போன்ற வினாக்கள் இவர்களைப் பொறுத்தமட்டில் தேவையற்றவை யாகிவிடுகின்றன. அன்பு, அல்லது காதல் என்பது மனத்தில் நிகழும் ஒரு நுண்ணிய நிலை என்ப தைத் திருவள்ளுவருங்கூடக் கூறுகிறார். "மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன் செவ்வி தலைப்படு வார்’ (1289) என்பது போன்ற குறள்களில் அன்பின் இலக்கணம், இயல்பு என்பவை பேசப் பெறுகின்றன. இவ் வருங் குறளுக்கு உரையிட்ட பரிமேலழகருக்குக்கூட இக்குறளின் நுண்மை பிடிபடவில்லை. வள்ளுவன் காதல் பற்றிக் கொண்டிருந்த கருத்துகள் பரிமேலழகரின் பிடியுள் அகப் படவில்லை. - - - மலரினும் மெல்லிது என்று கூறும்பொழுது மலரின் நிறம், மணம், தன்மை,மென்மையான தன்மை என்ப வற்றை ஆசிரியன் குறிப்பிடவில்லை என்பதை அடுத்த வரியில் தோன்றும் செவ்வி' என்ற சொல் காட்டி நிற்கிறது. அது ஒரு மனநிலையேயாகும். காதல் என்பது @g5 to sur ĵ am 60G u (mental status) என்பதைக் குறிக்க இதனைவிடச் சி ந ந் த உவமையைக் கையாள முடியாது. காதல் ஒரு மன நிலை என்றால் அதனுடைய மிக உயர்ந்த வெளிப் பாட்டில் அது பற்றிப் படர்வதற்கு ஒருத்தனோ ஒருத்தி யோ தேவையில்லை என்று கூடக்கூறிவிடலாம். காதலின் முதிர்ந்த நிலையாகிய அருள் யாவர் மாட்டும், இன்னார் இனியார் என்ற வேறுபாடு இன்றிப் பரவும்பொழுது இதனை உணரமுடியும். சிலர் அதன் செவ்வி தலைப்படு