பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் இ 21 இன்றைக்கும் சமுதாயத்திற்குப் பொருத்தமுடையனவாக உள்ளன. மேலும் அத் தத்துவத்தை அவர் எடுத்துக் கூறிய மொழியுங்கூடத் தத்துவம் பேசிய கிரேக்க மொழி போல் மாறிவிடாமல் இன்றும் படித்துப் புரிந்து கொள்ளும் அளவிற்கு நின்று நிலவுகிறது. சாதாரணக் கல்வி அறிவுடைய ஒருவன்கூடக் குறளைப் படித்தால் நூற்றுக்கு ஐம்பது விழுக்காடு புரிந்து கொள்ளும் நிலையில் அந்நூல் அமைந்துள்ளது. தத்துவத்தின் நிலை இவ்வாறாகும் என்று ஒரளவு கண்ட பிறகு பக்தி என்பது பற்றியும் பக்தன் பற்றியும் அவன் செய்யும் பணிகள் பற்றியும் ஒரளவு காண்டல் வேண்டும். பக்தி, பக்தன் என்று கூறியவுடன் அது ஏதோ இந்த நாட்டிற்கே உரிமை என்று யாரும் கருதிவிடவேண்டா. உலகின் எல்லாப் பகுதி களிலும் பக்தர்கள் உண்டு: எல்லாக் காலத்தும் உண்டு. இது பற்றி விரிவாகக் காணலாம். பக்தியாவது யாது? பக்தி என்றும் பக்தர்கள் என்றும் நான் இங்கே குறிப்பது மேனாட்டார் குறிக்கும் மிஸ்டிஸிசம்' (Mysticism) என்ற சொல்லுக்கும் மிஸ்டிக்ஸ் (Mystics) என்ற சொல்லுக்கும் நேரான பொருளிலாகும். மிஸ்டிக்ஸ் என்ற சொல்லுக்குப் பொருள் கூறவந்த ஆகஸ்போர்ட். அகராதி இறைப்பொருளினிடம் தம்மையே அடைக்கல மாகத் தந்து பக்தி அல்லது தியானமூலம் இறை யனுபவத். தைப் பெறுபவர் என்றும் சாதாரண அறிவிற்கு அப்பாற் பட்டதாகிய ஆன்மீக உண்மைகளை உணரமுற்படுபவர் ' என்றும் கூறிச்செல்கிறது. மிஸ்டிக்ஸ் என்ற சொல்லின் 1. One who seeks by contemplation or self-surrender to obtain union with or absorption into the Dietv, or who believes in spiritual apprehension of truths. beyond the understanding. Concise Oxford Dictionary 798.