பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அ. அ. ச. ஞானசம்பந்தன் இப்பொருளை நாம் பக்தர்கள் என்ற சொல்லுக்கு வழங்கு கிறோம். தியானம் என்பதும் இறையனுபவத்தில் ஒன்றா வதும் மிஸ்டிஸிலத்தில் முக்கியமான கூறுகள் எனில், பக்தி யிலும் இவை இரண்டும் உயிர் நாடியான கூறுகள் என்ப தையும் அறிவோம். - பக்தர்கள் நம் நாட்டில் பக்தர்கள் அல்லது அடியார்கள் என்பவர்கள் இருந்ததுபோலவே உலக முழுவதிலும் எல்லாச் சமயங்களிலும் பக்தர்கள் இருந்துள்ளனர். இவர்கள் எச்சமயத்தைச் சேர்ந்தவராயினும்,தாம் கடைப் பிடிக்கும் சமயத்தைக் கடந்தவர்களாய், ஏனைய சமயிகள் கூறும் சடங்கு முதலியவற்றை ஏற்காதவர்களாய் @GÜLř. Ĉg5 tilharsiv (Plutinous) er#. Listâ (St. Paul) போன்ற கிறித்துவ பக்தர்களும், கலீல் கிப்ரான் போன்ற சூபிகள்என்றழைக்கப்படும் இஸ்லாமியபக்தர்களும் உண்டு. இயற்கையை இறைவனாகக் கண்டு அதையே தியானம் செய்யும் வோர்ட்ஸ்வொர்த் (Words worth) போன்றவர் களும் இயற்கை போற்றும் பக்தர்கள் (Nature mystics) எனப்படுவர். - - - மேனாட்டு பக்தர்களைப்பற்றி எழுத் வந்த எப்.எச். பிராட்லி (P.H. Bradly) என்பார் கூற்றுக் கூர்ந்து நோக்கற்குரியது. சமய வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனுபவத்தைவிட உண்மையானது வேறு இருத்தல் முடியாது. பக்தி அனுபவத்தில் ஒருவன் உண்மைப் பொருளோடு தொடர்பு கொண்டுள்ளான் என்பதை மறுப்பவன், தான் பேசுவது இன்னது என்பதை அறியாதவனாவான்'. டாக்டர் வில்லியம் பிரெளன் 1. Nothing can be more real than what we experience in religion. The person who says that man in his religious consciousness is not