பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 23 (Dr. William Brown) என்ற மனவியல் மருத்துவர் பேசுவதையுங் காண்டல் பயனுடையது. மனவியல் மருத்துவன் என்ற முறையில் அல்லாமல், சாதாரண மனிதன் என்ற முறையில் கூற வேண்டுமாயின், இதுவரை வாழ்க்கையில் பெற்ற அனுபவத்தினால் உறுதிப்பட்ட முடிபு யாதெனில் தனி மனிதர்கட்கும், இறைப்பொருளுக் கும் இடையே தொடர்பு இருக்கிறது என்று கூறுவது நம்பத் தகுந்ததேயாகும்.’’’ இந் நாட்டிற்றோன்றிய மணிவாசகர், சுந்தரர், நம்மாழ்வார் போன்றவர்கள் தாம் இறைவனைக் கண்ட தாகவும் அவனுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் பாடுவது எத்துணை உண்மையுடையது என்பதனை நம்மில் சிலர் நம்ப மறுத்தாலும் மேலே காட்டியுள்ள சான்றுகள் அது முற்றிலும் உண்மை என்பதை அறிவிக் கின்றன. தியானம் (Contemplation) என்பது இவ்வழியின் அடிப்படை என்றால் பிளேட்டோ போன்றவர்களுங்கூட இப்பெயர் பெறத் தக்கவராகின்றனர். இறைப்பொருளின் இருப்பை உணர்ந்து அதன் மாட்டு பக்தி செய்கின்ற அடியார்கள் இவ்வுலகையும் அதிலுள்ளவற்றையும் உள் பொருளாகவே கருதினர். இவை அனைத்தும் மாயை என்கின்ற எண்ணம் பக்தர் in touch with reality does not know what he is talking about. - - –Mysticism in Religion P. 199, 2. If I may speak no longer as a psychologist but as a man, the experience of life confirm my belief that the possibility of some communion between that divine power and the individual is not an illusion. —slid 499.