பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 27 "கனவேயும் தேவர்கள் காண்பரிய கனைகழலோன்' -தெள்ளே 10 'ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ்சோதி' - -எம்பா. 1 'உண்டுஓர் ஒண்பொருள் என்று உணர்வார்க்கெலாம் பெண்டிர் ஆண்அலி என்று அறியொண்கிலை" சதக. 42 போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டு அறிவாரை' -பள்ளி 5 'அருளால் எவையும் பார் என்றான்-அத்தை அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன் இருளான பொருள் கண்டதல்லால் கண்ட என்னையும் கண்டிலேன் என்னேடி தோழி' -தாயுமானார் ஆனந்தக்களிப்பு 13 இவ் வனுபவத்தைப் பெற இந்த பக்தர்கள் அறிவின் துணைக் கொண்டு புறப்படவில்லை. நம்பிக்கை (Faith) என்பதன் துணைக் கொண்டு புறப்பட்டு அகஒளி(Internal Illumination) யின் ஊடே புகுந்து சென்று, இறுதியில் அனுபவத்தைப் பெறுகின்றனர். இந்நிலையில் அறிவு தன் இயலாமையை உணர்ந்து கொள்வதால் அதற்கு எவ்விதக் குறைவும் இல்லை. அனுபவ வளர்ச்சி : பக்தனுடைய அனுபவம் வளர்கின்ற முறையே அலாதியானது. ஆன்மா என்பது பரம்பொருளின் ஒரு கூறாகும் என்றால் பரம்பொருள் யாண்டும் நிறைந்தி