பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 இ. அ. ச. ஞானசம்பந்தன் ருக்கும் தன்மை பெற்றிருப்பதுபோல் இந்த ஆன்மாவும். அதில் ஒரு சிறு பகுதியைப் பெற்றிருக்கும் என்பதில் தவறு ஒன்றுமில்லை. அவ்வாறானால் உள்பொருள் (reality). என்பதன் பல்வேறு பகுதிகளோடும் ஆன்மா தொடர்பு கொண்டிருத்தல் வேண்டும். தருக்க முறையில் பார்த்தால் உள்பொருளின் தொடர்பு கொண்டுள்ள ஆன்மா, தேவை ஏற்படும் பொழுது நுண்மையான சூக்கும உலகையும் கடந்து உள்பொருள்கட்கெல்லாம் மூலமாகிய பரம் பொருளுடன் தொடர்பு கொள்வதில் வியப்பில்லை. மின் பாய்ச்சல் உதாரணம் : மின்சாரம் உடைய இரண்டு முனைகள் உள்ளன. ஒரு முனையில் குறைந்த வலுவுடைய மின் ஆற்றலும், மற்றொரு முனையில் நிறைந்த வலுவுடைய மின் ஆற்ற லுய் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இவை இரண்டின் இடையே தடைப் பொருள்களாகிய (Insulations) காற்று, பீங்கான் முதலிய இருப்பதாகவும் கொள்வோம், இத்தடைப் பொருள்களின் இருமுனை களிலுள்ள இந்த இரண்டு மின் முனைகளும் எவ்விதத். தொடர்பும் கொள்வதாக இல்லை. ஆனால் இம் முனைகள் தம் இடத்தைவிட்டு ஒன்றை ஒன்று நெருங்கி வருவதானால் ஒரு குறிப்பிட்ட தூரம் ஒன்றை நோக்கி ஒன்று நெருங்கியவுடன் இடையே உள்ள தடைப்பொருள் களைக் (Insulation) தாண்டிக் கொண்டு மின் ஆற்றல் பாய்கிறது. அதேபோலத்தான் ஆன்மாவும் பரம்பொரு ளும் நெருங்க நெருங்க இடையே உள்ள தடைப்பொருக ளாகிய இவ்வுடம்பு, உலகம் முதலிய அனைத்தையும் தாண்டிக் கொண்டு ஆன்மா இறையனுபவத்தைப் பெறுகிறது. மின் ஆற்றல் வலுவுடைய முனையிலிருந்து வலுக் குறைந்த முனைக்கு தாவும்பொழுது வலுக்குறைந்த முனைகூடப் பேராற்றலைப் பெறுகிறது. இன்னும் இது