பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் ) 29 பாயுங்கால் ஒளி கூட உண்டாகிறது. இவை இரண்டும் ஆன்ம அனுபவத்திலும் ஏற்படுகின்றன. மின் முனைகள் எந்த அளவு ஒன்றை ஒன்று நெருங்கும் பொழுது இந்த ஆற்றல் பாய்கிறது என்று கூறல் இயலாது. ஒன்றை ஒன்று நெருங்கிக் கொண்டே வந்தால் திடீரென்று எதிர் பாரா வகையில் ஆற்றல் பாய்ச்சல் ஏற்படுகிறது. அது போலவே பக்தர்கள் இறைப் பொருளை நெருங்கிச் செல் கையில் திடீரென்று யாரும் எதிர்பாரா நேரத்தில் இந்த ஆற்றல் பாய்ச்சல் ஏற்படுகிறது. ஆற்றல் பாயத் தொடங் கியதை உடன் தோன்றும் ஒளியாலேயே புறத்தே இருப்பவர்கள் அறிய முடியும். ஆனால் மின்முனை அதனை ஏற்றுக் கொள்வதால் அதிக சக்தியைப் பெறு கிறது என்பதை அக்கம்பிதான் அறிவிக்குமே தவிரப் புறத்தே இருப்பவர்கள் அறிய முடியாது. அதே போல இந்த பக்தர்கள் அந்த அனுபவத்தைப் பெற்றுள்ளனர் என்பதைப் புறத்தே இருந்து பார்ப்பவர் கள் கூட அவர்கள் முகத்தில் தோன்றும் ஒளியால்தான் அறிந்து கொள்ள முடியும். ஆனால் அனுபவத்தைப் பெற்றுள்ள பக்தர்கள் பொறிபுலன் தொழில்கள் அனைத் தும் அடங்கப் பெற்றுத் தம் பூத உடம்பின் இயல்பு முற் றிலும் மறக்கப்பட்ட நிலையில் உள்ளனர் என்பதைப் புறத்தே இருப்பவர்கள் அறிய முடியாது. அனுபவம் எத்தகையது : இக்கருத்தை மேனாட்டுப் பக்தர்பற்றி எழுதிய பலரும் ஏற்றிக் கொண்டுள்ளனர். மணிவாசகர் ஐம் புலன்கள் ஆறவந்தனை, ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை மால் அமுதப் பெருங்கடலே! மலையே! உன்னைத் தந்தனை (சதக-26) என்ற பாடலில் அத்தொடர்பு ஏற் டட் டவுன் நடைபெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்றைக் குறிப் பிடுகிறார். இனி பக்தர்கள் பெறும் அற்புதமான அனுப வம் பற்றிப் பேசும் அடிகள்,