பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 0 அ. ச. ஞானசம்பந்தன் 'வாக்குஇறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை குரம்பை தோறும் நாயுடல் அகத்தே குரம்பை கொண்டு இன்தேன் பாயத்தி நிரம்பிய அற்புதமான அமுத தாரைகள் எற்புத் துளை தொறும் ஏற்றினன்......' (அண்டப் - -170-171}. என்கிறார். இவர்கள் பெறும் அனுபவத்தின் அடிப்படையாக உள்ள மூலப் பொருள், உலகிலுள்ள பல்கோடி உயிர் களையுப் விட்டுவிட்டுத் தம்மாட் டு தனிப்பட்ட கருணை கொண்டு வந்து இந்த உதவியைச் செய்தது என்றும் இவர்கள் கருதுகின்றனர். திருவாசகத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் பல அடியவரும் இருக்க இறைவன் தம்மைத் தேர்ந்தெடுத்து இந்த அனுபவத்தைப் பெறு மாறு செய்தது என் கருதி என்று மணிவாசகப் பெருந்: தகை வியப்படைகின்றார். அறிவின் துணைகொண்டு அல்லாமல் உணர்வின் துணைகொண்டு பெறப்பட்ட இந்த அனுபவத்தைப் பெறாதவர்கள் இதனைப்பற்றிப் பேசுதலும், அது உண்டு. இல்லை என்ற வாதத்தில் புகுதலும் அறியாமையுடைய தாகும். இவ்வாறு கூறுவதால், இன்று தாம் ஒர் உயர்ந்த நிலையை அடைந்துவிட்டதாகப் பறைசாற்றிக் கொண்டும் செப்பிடுவித்தைகள் காட்டிக் கொண்டும். திரிபவர்களையெல்லாம் பக்தர்கள் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதாக யாரும் நினைந்து இடர்ப் படவேண்டா. - : பக்தர்களைப் பொறுத்தமட்டில் பலர் தம் பக்தி வாழ்க்கைக்கு முதற் படியாகக் குறிப்பிட்ட ஓர் உருவ வழிபாட்டை மேற்கொள்வர். நாளாவட்டத்தில் அவர்கள் வளர்ச்சியடையும் பொழுது தனிவடிவ வழிபாடு(Personal