பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 31 God) மெல்ல மெல்ல மறைந்து உருவும் வடிவமுமற்ற பரம்பொருளுடன் நேரடித் தொடர்பு ஏற்படுகிறது. சிவபெருமானை மிக விரிவாக வருணித்துப் பாடிய மணிவாசகர், ஞானசம்பந்தர் போன்றவர்கள் செல்லச் செல்ல 'வண்ணந்தான் சேயதன்று வெளிதேயன்று' (சத 25)என்றும் பெண்டிர் ஆண் அலி என்று அறியொண் கிலை' (சத. 42) என்றும் “ஈறாய்முதல் ஒன்றாய் இருபெண் ஆண்குண மூன்றாய் மாறாமுறை நான்காய் வருபூதமவை ஐந்தாய் ஆறார் சுவை ஏழோடிசை எட்டுத்திசை தானாய் வேறாய் உடன் ஆனான் இடம் விழிம்மிழ லையே' -திருமுறை 1 -11-2 என்றும் பாடுகையில் தம் விருப்பத்திற்கேற்ற ஒர் உருவ வழிபாட்டில் தொடங்கி இவர்கள் உருவ, வடிவு கடந்த உள்பொருளோடு நேரிடைத் தொடர்பு கொண்டுவிட் டனர் என்பதை அறியமுடிகிறது. இக்கருத்தை ஆல்டஸ் ஹக்ஸ்லி தாம் எழுதியுள்ள வழியும் பயனும் (Ends and Means) என்ற நூலில் மிக அழகாக எடுத்து விளக்கு கிறார்." பக்தி பற்றியும, பக்தர்கள் பற்றியும் மேனாட்டார் கூறும் பல கருத்துகள் நம் நாட்டுப் பக்தர்கள் கூறுவன வற்றோடு பெரிதும் ஒத்திருத்தலைக் கண்டோம். இனிப் 1. Those who take the trouble to train themselves in the arduous technique of mysticism always end, if they go far enough in their work of recollection and meditation, by losing their intutions of a perSonal God, and having direct experience of a reality that is impersonal. - Endse and Means.