பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 0 அ. ச. ஞானசம்பந்தன் பக்தி பற்றித் தமிழ்நாட்டில் மிகப் பழங்காலத்திலிருந்து தோன்றி வளர்ந்த கருத்துகளை ஒருவாறு காணலாம். தமிழர் கண்ட பக்தி நிலை : சங்ககால நூல்களில் திருமுருகாற்றுப்படை,பரிபாடல் என்ற இரண்டையும் தள்ளிவிட்டு ஏனையவற்றை எடுத் துப் பார்த்தால் பக்தி அந்நூல்களில் தனியே பேசப்பட வில்லை என்பதை அறியலாம். ஆனாலும் பக்தியின் உயிர் நாடியான சில கருத்துகள் அங்கு இடம் பெறுவதையும் அறியமுடியும். உதாரணமாக, குணங்குறி கடந்துள்ள பரம்பொருளை முடிவிலாதது ஒரு பொருள் என்று மணிவாசகர் போற்றித் திரு அகவலில் கூறுகிறார். இதே கருத்தை வள்ளுவப் பெருந்தகைவேண்டுதல் வேண்டாமை இலான்’ (குறள் 4) என்று கூறுவர். எனவே முழுமுதற் பொருள் விருப்பு வெறுப்பு என்பவற்றைக் கடந்து நிற்கின்ற ஒன்று என்ற உண்மையை இருவரும் கூறக்கேட்கிறோம். இதே கருத்தைப் புறப்பாடல் ஒன்றும் கூறுகிறது. ஆனால் தத்துவமாக எடுத்து விளக்காமல் வேறு முறையில் கூறுகிறது. . 'நல்லவும் தீயவும் அல்ல குவியினர்ப் புல் இலை எருக்கமாயினும் உடையவை கடவுள் பேணேம் என்னா ஆங்கு' - புறம். 106 இவ்வாறு புறநானூற்றுக் காலத்திலேயே இத்தகைய உயர்ந்த தத்துவத்தை நம்முன்னோர் அறிந்திருந்தன ராதலின் பிற்காலத்தில் வந்த பாசவதைப் பரணி என்ற நூலுடையார், . என்பாவம் ஆறுகடல் ஏழிருந்தும் என்னம்மை, அன்பாளர் கண்ணருவி ஆடுவது திருவுள்ளம்' - 184 என்று பாடுமுகமாக இறைத் தத்துவத்தின் மிக உயர்ந்த கூறு ஒன்றை எடுத்துக் கூறுகிறார். இதன் பொருள்