பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 88 ஆழ்ந்து நோக்கற்குரியது. ஏழு கடல்களிலிருந்தும், சங்கல்ப சுலோகத்தில் பேசப்படும் ஆறுகளிலிருந்தும் நீரைக் கொணர்ந்து ஆட்டினாலும் இறைவி அவற்றை விரும்ப்ாமல். அன்பர்களுடைய கண்ணிலிருந்து விழும் இரண்டு சொட்டுக் கண்ணிருக்காக ஏங்கி நிற்கிறாளாம்! முருகாறறுப்படையில் : மிகப் பழையதாகிய திருமுருகாற்றுப்படை, மிகப் பெரிய மனிதத் தத்துவத்தையும் மிகப் பெரிய கடவுட் தத்துவத்தையும் மிக எளிமையாகப் பேசுகிறது. மனித மனத்தின் கூறுபாட்டை நன்கு அறிந்த கவிஞன் மானிடர் அனைவரையும் ஒரு சில கூறுகளாகப் பிரித்தான். கல்வி, கேள்வி என்ற வாசனை எதுவுமே இல்லாதார் ஒரு கூட்டம், உலக இன்பங்களை இல்லறம் உட்பட விடாமல் அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பார் ஒரு புறம், உடலை வளர்த்து நல்ல முறையில் போராடுவதே சிறப் பெனக் கருதுவார் ஒரு புறம்; மிக உயர்ந்த தத்துவ ஞானத்தின் மூலம் இறை இலக்கணத்தை அறிந்தார் ஒரு புறம்; வெறும் கிரியைகள் சடங்குகள் என்பவற்றையே பெரிதெனக் கருதுவார் ஒரு புறம் எனப் பல்வேறு குழுக் களாகப் பிரிந்து நிற்பார் அனைவரையும் வகைப்படுத்திய கவிஞன் இவர்கள் அனைவர் மாட்டும் ஒரு பொதுத் தன்மையைக் காண்கிறான். நாகரிகமற்ற கூட்டத்தார் ஆட்டை அறுத்து அதன் குருதியில் அரிசியைக் கலந்து சிதறி முருகா' என்று கத்துவதன் மூலம் அவனை அழைக் கின்றனர். இதன் மறுதலையாக மாபெரும் அறிஞர் களாகிய தத்துவவாதிகள் புலராக் காழகம் புலர உடீஇ, உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி நாவியல் மருங்கில் நவிலப் பாடும் (முருகு-184-87) இயல்பினர். அவர்களும் முருகன் சந்நிதியில் நின்று அவனை வழிபடுகின்றனர். 3-، لا يلي