பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. அ. அ. ச. ஞானசம்பந்தன் அறிவு என்பதைப் பரம்பரையிலும் பெறாமல் உணர்வு ஒன்றுமட்டுமே நிற்கின்ற ஒரு கூட்டத்தாரும் ஒரே முருகனைத் தான் வழிபடுகின்றனர். இருவர்க்கு E. பொதுவாகவே அவன் உள்ளான். கல்வியற்றவர் மாட்டு வெறுப்பும் கல்வியுடையார் மாட்டு விருப்பும் காட். டாதவன் இறைவன். இதுவே முனிவிலாத பொருட். டன்மை." கம்பகாடனில் : திருமுருகாற்றுப்படை என்ற பழைய தமிழ்ப் பாடல் கண்ட இப்பேருண்மை தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தொடர்ந்து போற்றிப் பாதுகாக்கப் பெற்றே வந்ததாக அறிகின்றோம். வான்மீகக் கதையை எடுத்துப் பாடி னாலும் அதனை முற்றிலும் மாற்றித் தனதாக ஆக்கிக் கொண்டான் கம்பநாடன் என்பதை நாம் அறிவோம். இதே கருத்தை, அதாவது அறிவும், உணர்வும் ஒரே பரம் பொருளில், சங்கமமாகின்றன என்பதையும், அப்பரம் பொருள் இவை இரண்டின் இடையேயும் எவ்வித வேறு பாட்டையும் பாராட்டுவதில்லை என்பதையும் மிக அழகாகவும் தெளிவாகவும் கவிச் சக்கர வர்த்தி வெளிப் படுத்துகிறான். உடன் பிறவாத் தப் பியராக இராமபிரான் ஏற்றுக் கொண்ட மூவரும் மூன்று நிலையைச் சேர்ந்தவர்கள். காப்பிய முறையில் இம்மூவரும் இராமபிரானை அடைந்த முறை வைப்பும் ஆராயத் தகுந்ததாகும். இராமனைக் கண்ட மாத்திரத்தில் அவன் பெருமை, சிறப்பு, பிறவி நோய்க்கு அவன் மருந்தாகும் தன்மை என்று எது பற்றி யும் ஆராயமல், சிந்திக்காமல் அவனிடம் முற்றிலுமாகத் தன்னைச் சரணாகதியாகத் தந்துவிட்டான் கங்கை வேடனாகிய குகன், காளத்தி வேடனாகிய கண்ணப்பன் முழுமுதற் பொருளுக்கு மான் இறைச்சி கொண்டு.