பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 85 சென்றதுபோல் கங்கை வேடன் இராமனுக்கு 'தேனும் மீனும் திருத்திக் கொணர்ந்தான். "எதனையும் கடவுள் பேணேம்' என்று கூறாது எனப் புறநானூறும் முருகாற்றுப் படையும் கூறியதுபோல் குகனின் மீனுணவை இராகவன் ஏற்றுக்கொள்கிறான். அடுத்துத்தம்பியின் இடத்தைப்பிடித்தவன் சுக்கிரீவன். இவன் அன்பாகிய உணர்வும் ஆராய்கின்ற அறிவும் சரி சமமாகப் பெற்றவன். பரம்பொருள் என்பதை உணர்ந் தும், அனுமனால் உணர்த்தப் பெற்றும், இராமனை முழுதும் நம்பாமல் மரா மரத்தில் அம்பு போட்டு இராமன் தன் ஆற்றலைக் காட்டிய பிறகே அவன் ஆற்றலை ஏற்றுக் கொள்கிறான். எனவே எத்துணை உணர்வு வசப்படினும் அறிவினால் ஆராய்ந்து பாராமல் எதனையும் ஏற்றுக் கொள்ளாத ஓர் இடை நிகர்த்த கூட்டத்தின் பிரதிநிதியாக விளங்குகிறான் சுக்கிரீவன். ஏறத்தாழ மனநிலை இது போன்றதேயாகும். அறிவுக்கும் உணர்வுக்கும் ஓயாது நடைபெறுகின்ற போராட்டத்தில் சில சமயம் அறிவும், பிற சமயங்களில் உணர்வும் வெற்றி பெறுவதுண்டு. என்றாலும் இவை இரண்டின் இடையே நடைபெறுகின்ற போராட்டத்தை நமக்கு அறிவுறுத்தவே சுக்கிரீவன் பாத்திரப் படைப்பைக் கம்பநாடன் இவ்வாறு படைத்துக் காட்டுகிறான் போலும். இனி மூன்றாவது தம்பியாகிய வீடணன் முற்றிலும் அறிவே வடிவானவள். “உம்பரின் ஒரு முழம் உயர்ந்த ஞானத்தம்பி என்றுகவிஞனாலேயே பாராட்டப்படுபவன், இராகவனையும் அவன் வீரச் செயல்களையும், வாலியை ஒழித்த வரலாற்றையும் நன்கு அறிந்திருந்தும் இந்த அறிஞன்தானே நேரிற் கண்டு அறிவினால் ஆராய்ந்து சோதித்துப் பார்த்தாதொழிய இராகவனை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. பிறவியின் பகைஞன் போலுமால்' (வீட. அடை. 20) என்று பேசுகிறான். போலுமால் என்ற சொல்லால் ஒருவேளை இருக்குமோ