பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. இ. அ. ச. ஞானசம்பந்தன் என்றுதான் கூறுகிறான். எனவே அறிவின் துணை கொண்டு உண்மை நாடுபவன் உணர்வு கொண்டு நாடு பவனைப் போல உடனே எந்த முடிவுக்கும் வருவதில்லை என்பதனையே கவிஞன் காட்டுகிறான். உணர்வே வடிவான (Pure emotion) குகன் இறைப் பொருளில் முதலில் ஆட்படுகிறான். உணர்வும் அறிவும் (partial intellect and partial emotion) o an u &#ffalor இரண்டாவதாக ஆட்படுகிறான். அறிவே வடிவான (Pure intellect) of 1-courair இறுதியாக ஆட்படுகிறான். இதில் வியப்பு என்னையெனில் இம்மூவரையும் ஏற்றுக் கொள்ளும் பரம்பொருள் இம்மூவரிடையேயும் எத்தகைய வேறுபாடும் பாராட்டாமல் மூவரையும் தம்பியராக, ஏற்றுக்கொள்கிறது. முருகாற்றுப்படை கண்ட இக் கருத்தைக் கம்பநாடன் விரித்துக் காப்பியத்தில் அமைத்துக் காட்டுகிறான். முற்றிலும் உணர்வே வடிவான குகனுக் கும், முற்றிலும் அறிவே வடிவான வீடணனுக்கும் வழி காட்டும் குரு தேவைப்படுவதில்லை. இடை நிகர்த்த சுக்கிரீவனுக்கு அனுமன் போன்ற ஒருவன் தேவைப் படுகிறான். - மேலும் உணர்வு வடிவானவர் உடனடியாக ஈடுபடுவ: துடன் விரைவில் அவ்விடுபாட்டின் பயனையும் அடைவர் என்பதைக் கங்கைவேடன் (குகன்) வரலாறும் காளத்தி வேடன் (கண்ணப்பர்) வரலாறும் அறிவுறுத்தும், கண்ணப்பர் வரலாற்றில் காணப்படும் சிவகோசரியார் அறிவுவாதியாதலின் இறுதிவரை இறைவனை அவர் நேரே காணும் வாய்ப்பைப் பெறவில்லை என்பது நோக்கற்குரியது. - ’. . இனி இதனையடுத்துக் கடவுட் பொருளின் இலக்கணம் பேசும் திருமுருகாற்றுப்படை அப்பரம் பொருள், - ஆர்வலர் ரத்த மேவரு நிலையினும் வேலன் தைஇய வெறியயர் களனும்