பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் இ 37 காடும், காவும், கவின்பெறு துருத்தியும் யாறும், குளனும், வேறுபல் வைப்பும் சதுக்கமும் சந்தியும், புதுப்பூங் கடம்பும் மன்றமும் பொதியிலும், கந்துடை நிலையினும்' - -முருகு 221-6. உறைகின்றதென்ற தத்துவத்தையும் பேசுகிறது. இத் துணை உயர்ந்த தத்துவம் பேசிய அத்தத்துவ ஞானி இதனை அடுத்துப் பக்திபற்றிப் பேசுகிறார். யாண்டும் உள்ள இப்பரம் பொருளை அடையவேண்டிச் செல்வான் என்ன செய்தல் வேண்டும் என்ற வினாவுக்கு விடை தருகின்றார். இறப்ப உயர்ந்த இப்பொருளை அடைய மிகப்பெரிய தவம் முதலியன இயற்றவேண்டும் போலும் என ஐயுறுவாரை நோக்கி இதோ பேசுகிறார். நீ அவனை அடைய வேண்டும் என்ற ஒரு குறிக்கோளுடன் புறப்பட்டால் போதுமானது. எங்கும் துரத்தில் அவனைத் தேடி அலையவேண்டா. காடு கா முதல் கந்துடை நிலைவரை வேண்டினர் வேண்டியபடி வழிபட அவற்றை ஏற்றுக்கொண்டு அங்கங்கு அவன் உறை கின்றர்ன். உனக்கு வேண்டப்படுவது உறுதி மட்டுமே யாகலின் அந்த உறுதியுடன் நீ புறப்பட்டால் போதும். புறப்பட்ட உடனே நீ விரும்பியதை அடைந்துவிடலாம்' என்ற கருத்தில் முருகாற்றுப்படை பேசிச் செல்கிறது. ' எய்யா நல் இசை, செவ்வேல் சேஎய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரிக் கொள்கைப் புலம்பிரிந்து உறையும் செலவு நீ நயந்தனை ஆயின், பலவுடன், நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப - இன்னே பெறுதி, நீ முன்னிய வினையே!' -முருகு 61-66. இத்துணைத் தூரம் தத்துவத்தையும் பக்தியையும் கலந்து பேசிய கவிஞன், தத்துவ விசாரணையில் ஈடுபட்ட மனம்,