பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அ. ச. ஞானசம்பந்தன் சாதாரண நிலையில் நின்று உய்கதி அடைய மனம் ஆகிய இரண்டையும் நோக்கி ஒரே விடையை நல்குகிறான். புறப்படவேண்டும் என்ற நினைவு தோன்றி னாற்போதுமானது. நினைத்த பயன் நினைத்த அந்தக் கணத்திலேயே, நினைத்த இடத்திலேயே கிடைக்கும் என்ற உறுதியை, நம்பிக்கையை நல்குகிறான். தத்துவ, பக்தி வேறுபாடு: இங்கேதான் தத்துவத்திற்கும் பக்திக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிய முடிகிறது. நான் ஐயங் கொள்கிறேன். எனவே நான் என்ப தொன்றுண்டு' ( doubt therefore i am)என்று பேசிய டாக்கார்ட்டேயின் தத்துவஞானம் எங்கே? ஆராய்ச்சி என்ற பெயரில் அனைத்தையும் ஐயுற்றுத் தன்னையும் உட்பட அனைத் தையும் பிளந்து பார்த்து உண்மை காணப் புறப்படு கிறது தத்துவம் பொருள் இருக்கிறது. என்ற மலை போன்ற நம்பிக்கை ஒன்றையே துணையாகக் கொண்டு வாழ முற்படுகிறது பக்தி, பொருள்களைச் சோதனை மூலம் ஆராய்ந்து அவற்றின் இயல்பை அறியவேண்டும் என்பதற்காக மட்டும், வேறு பயன் கருதாமல் ஆராய்வது தத்துவம். வாழ்க்கை என்றால் அதன் பயன் என்று ஒன்று இருக்கத்தானே வேண்டும் என்ற முடிவில் நம்பிக்கை கொண்டு தொழிற்படுவது பக்தி, இத்தகைய பக்தி உலகில் ஈடுபடுபவன் ஒருவகை மனநிலையை (mystic state) அடைகின்றான். மேலை நாட்டுத் தத்துவவாதிகளுள் எம்பிரிசிசக் கொள்கை உடையாரல்லாதஸ்பினோபொ (Spinoza) போன்றதத்துவ ஞானிகள் அறிவு வழியில் சிந்தித்துக் கொண்டே சென்றும் அறிவு வழியிலேயே கடவுட் பற்றுக் கொண்டனர் என்ப தையும் அறிதல் வேண்டும். மாறுபட்ட பொருள்களி டையே காணப்பெறும் ஒருமைப்பாடும்,முரண்பாடுகளின்