பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 0 அ. ச. ஞானசம்பந்தன் முருகாற்றுப்படையில்-தொடர்ச்சி : பரம் பொருள் வேண்டுநர் வேண்டியாங்கு வழிபட ஆண்டாண்டு உறையினும் அதனைக் கண்டவுடன் தன் ஆர்வங் காரணமாக பக்தன் அதனைப் புகழத் தொடங்கி விடுகிறான். பொருளைக் கண்டவுடன், 'கைதொழுஉப் பரவிக் காலுற வணங்கி நெடும் பெரும் இமையத்து நீலத் பைஞ்சுனை, ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறுஅமர் செல்வ! ஆல்கெழு கடவுட் புதல்வ! மால்வரை மலைமகள் மகனே! மாற்றார் கூற்றே! போர்மிகு பொருந குரிசில்' - - முருகு 252லிருந்து 277. என்ற முறையில் புகழத் தொடங்கிவிடுகிறான் பக்தன். ஆனால் இவ்வாறு புகழ்ந்து கொண்டுவரும் பொழுதே அவனுடைய அகமனம் சிந்திக்கத் தொடங்குகிறது. யாரை இப்பொழுது புகழ்கிறோம்? இவ்வாறு பல புகயுங்களாகப் புகழ்ந்தாலும் அவனை முழுமையாக நாம் அறிந்து கூறி விட முடியுமா? சொல்லுக்கு அப்பாற்பட்டவனாய் இருத் தவினால் தானே 'கட' என்றும், சொல்லும் பொருளுமாய் இருத்தலினால்தானே 'உள்' என்றும் சேர்த்து கடவுள்' என்று கூறினர். அத்தகைய பொருளை எத்துணை அறி யாமை கொண்டு யான் புகழத் தொடங்கினேன்? என்று சிந்தித்தவுடன் புகழ்வதை உடன் நிறுத்திவிடுகிறான் பக்தன், உடனடியாகத் தன்னுடைய சிறுமையும் பொருளின் இறப்ப உயர்ந்த பெருமையும் நினைவுக்கு வரவே.