பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் இ 41 'நின் அளந்து அறிதல் மன்உயிர்க்கு அருமையின் நின் அடி உள்ளி வந்தனன்...... # 3. -முருகு 278, 9. என்று கூறி முடித்துவிடுகிறான், தான் ஒருவன் மட்டும். இப்பிறவியில் மட்டுங் கூறப்புகுவது எத்துணை அறி. யாமை! மன் உயிர்க்கு' என்ற சொற்களால் உயிர்கள் தோன்றிய நாளிலிருந்து நிலைபேறுடைய அப் பல்வேறு உயிர்களும் அளந்து காணமுற்படினும் அவன் இயல்பு அளத்தற்கரியது என்பதையே இவ்வடி உணர்த்தி நிற். 'கின்றது. . இதனினும் சிறந்த ஒன்றையும் கவிஞன் இவண் காட்டுகின்றான். தான் என்ற ஒரு பொருளாகி நின்று பக்தன் பெருமானைப் புகழ்ந்து கொண்டிருக்கின்றவரை அவன் இவன் புகழக்கேட்டு மகிழ்ந்து வெளிப்படவில்லை. ஆனால் தன் சிறுமையையும் அவன் பெருமையையும் உணர்ந்து அவனைப் புகழுதல் ஆகாத காரியம் எனத் தெளிந்து நின்னடி உள்ளி வந்தனன் என்று முற்றிலுமாக சரணாகிதி ஆகின்ற பொழுதுதான் இறைவன் வெளிப் படுகிறான் என்பதையும் கவிஞன் கூறுகிறான். 'நின்னடி உள்ளி வந்தனன் என்று கூறியவுடன் அவன் தோன்றி அஞ்சல் ஒம்புமதி அறிவன் நின் வரவு' எனக் கூறிப் பெறலரும் பரிசில் நல்குகின்றான்’ என்கிறது. கவிதை. அறிவு முதிர்ந்த நிலையில்தான், தத்துவத்தை நன்கு விளங்கிக் கொள்ளும் நிலையில் தான் அவனை அளந்து அறிதல் இயலாத காரியம் என்ற உண்மையான ஞானம் தோன்றுகிறது. அவன் இயல்புகளை அளந்து அறிய முடியாது என்பதை அறிவதே தத்துவ ஞானந், தான். இதனை உணர்வதே மெய்யுணர்தல் (Realization): எனப்பெறும். எனவே பிளேட்டாவின் கருத்துக்கு ஒரளவு மாறுபட்டு இந்நாட்டு பக்தன், சத்தியப்பொருள் உணரப் பட முடியும்ே தவிர அறியப்படக் கூடிய ஒன்றன்று: என்பதை நன்குணர்ந்து கூறியும் விட்டான்.