பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 0 அ. ச. ஞானசம்பந்தன் பக்தனும் சமயமும் : இவன் பக்தி என்று கூறும்பொழுது இன்று உலகிடைக் காணப்பெறும் பல்வேறு சமயங்களையும், அவை செய்யும் ஆட்சியையும் மனத்துட் கொண்டு இடர்ப்பட வேண்டா. சிறந்த பக்தன் ஒருவன் ஏதாவதொரு சமயத்தைச் சேர்ந்த வனாகத்தான் இருத்தல்வேண்டும்என்றும் கருதவேண்டா. பக்தன் சமயங் கடந்தவனாகவும் இருக்கலாம். உண்மைச் சமயவாதிகளாக இருப்பின் அவர்கட்கு பக்தி இன்றி யமையாதது என்று கூறலாமே தவிரப் பக்தனுக்குச் சமயம் இன்றியமையாத ஒன்றன்று என்பதை மறவாமல் மனத்துட் கொள்ள வேண்டும். ஆனால் இன்று சமயங்கள் அனைத்தும் ஆன்ம முன்னேற்றத்தைக் கருதும் நிறுவனங்களாக அல்லாமல் வாணிக நிறுவனங்களாகவே அமைந்துள்ளன. சாதாரண அறிவுபடைத்த மக்களைத் தன்பால் ஈர்த்துக் கொள்வ துடன் பெருஞ் சொத்தைத் தன் பால் வைத்துக்கொண்டு அதைப் பராமரிப்பதே தன் கடமையாகக் கொண்டுள்ள g; gysusw pseudo-Japl—u fleuikssir (established religions and religious establishments) a-sirsmloustáv gudušis(Gen அல்ல என்றும் சமயம் ஆன்மீக முன்னேற்றத்தைவிட உலகியல் முன்னேற்றமும், தன் செல்வாக்கும் இன்றியமை யாதவை என்று கருதத் தொடங்கியதோ அன்றே அது நிறுவனமாக ஆகிவிட்டது. அதனால் விளைந்த பயன் யாது என்று பர்டைஃப் (Berdyaeft) என்ற பெரியார் இதோ கூறுகிறார். 'அன்பைப் பெருக்கவேண்டும் என்ற காரணத்திற்காக மக்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கவும், உரிமை வேண்டும் என்று கூறுதற்காக பிடிவாதப்படுத்தும் வன்முறையை ஆதரிக்கவும் செய்வதுடன், ஆன்மீகக் கொள்கைகளை வளர்க்கும் வழிமுறைகளைக் கையாள