பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 0 அ. ச. ஞானசம்பந்தன் இருத்தல் இயலாது. இதன் அடிப்படையை விளங்கிக் கொள்ள வெகுதூரம் சென்று ஆயவேண்டா. சமய figyassissis (Religious establishments) ará surrors யினும் தாமும், தம் ஆட்சியும், அதிகாரமும் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பணிபுரிய முற்படுகின்றன. பக்தன் தான் என்ற ஒன்றே இல்லாமல் தன்னை இறைவன், உயிர்கள் என்பவற்றி னிடையே கரைத்துக் கொள்கிறான். எனவேதான் இவை இரண்டும் ஒன்றாக இருக்க முடிவதில்லை. இன்னுங் கூறப்போனால், புத்தர் ஒருவர் மட்டுமே சங்கம் என்ற ஒன்றை ஏற்படுத்தி அதற்குச் சில கட்டுப்பாடுகளையும். விதித்தார். இவரையல்லாத ஏனைய சமயங்களை நிறுவிய இயேசு பெருமான், நபி பெருமான், இந்நாட்டுச் சமயத்தைப் போற்றிய நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகிய யாவரும் தம் கொள்கையைப் பரப்ப நேரிடையாக மக்களிடம் தொடர்பு கெரண்டார்களே தவிர மடங்கள், நிறுவனங்கள் என்பவற்றை ஏற்படுத்தவே இல்லை. இப் பக்தர்கள் தத்துவவாதிகளைப் போல் மக்கள் தொடர்பை விட்டு விட்டு வாழ்ந்தவர்கள் அல்லர் எனினும் இவர்கள் தம் தொடர்பை நிலைநாட்ட நிறுவனங்களைத் தோற்றுவித்தால் அந்த அமைப்பைக் காப்பது பெரிதாக முடியுமே தவிரத் தாம் மேற்கொண்ட கொள்கையைப் பரப்புவது கடினமாக முடிந்துவிடும் எனக் கருதினர். இடுப்பில் கட்டும் துணியை எலி கடிக்கிறதென்று, எலியை வெருட்டப் பூனை வளர்க்கத். தொடங்கி இறுதியில் துறவி குடும்பஸ்தனான கதை, தான் இன்றைய நிறுவன சமயங்களின் கதையும். எனவே இவற்றில் தத்துவத்தையோ பக்தியையோ சென்று தேடுவது பயனற்ற செயலாகவே முடியும். பக்திபற்றிக் கீழ் மேல் நாட்டார்: - இனி, பக்தி (Mysticism) என்பதனை இந் நாட்டாரும் மேனாட்டாரும் கண்ட முறையைக் காண்டல் வேண்டும்.