பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 45 பக்தி அல்லது இறையன்பு என்பது இறைவனிடம் அன்பு செலுத்துவதன் மூலம் தான்' என்ற பொருள் சிறிது சிறிதாகக் கரைந்து அவன் என்ற பொருளில் அடங்கி விடுவதாகும். பக்தி ஏற்படும் முறையையும், அதன் வளர்ச்சியையும், அதன் விளைவையும் நாவுக்கரசர் பெருமான் நன்கு விளக்கியுள்ளார். - 'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் அன்னையையும் அத்தனையும்'அன்றே நீத்தான் அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத் தை தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள் தலைப் பட்டாள் நங்கை தலைவன் தானே' —6-25-10. இக் கருத்தை மொழி பெயர்த்துக் கூறுவதுபோல் அமைந்து உள்ள மேனாட்டார் கருத்தையுங் காணலாம். 'பக்தி என்பது தான் இறைவன் என்ற இரண்டிடத்தும் ஒர் ஒருமை ஏற்பட்டதாக உணருகின்ற உணர்வேயாம்; எனவே அது 'உண்மைச் சமயத்தின் உயிர்நாடியான ஒன் றாகும். சமய வாழ்வு என்பதன் பொருளும் பகுதியும் அதுவே. : . . . . . ; 1. “Mysticism is the immediate feeling of the unity of the self with God; it is nothing, therefore, but the fundamental feeling of religion, the resi gious life at its very heart and centre.” – Pflederer.