பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 47 uáš) (Mysticism) Légirésir (Mystics) srirp g\}. பிரிவு பற்றியும் இந்நாட்டுப் பெரியோர்கன் கூறிய வற்றிற்கும் மேலை நாட்டுப் பெரியோர் கூறியவற்றுற்கும். அதிகம் வேறுபாடு இல்லை என்பதை அறிய முடிகிறது. காரணம் அனுபவத்தால் உணரப்படும் ஒன்றை யார் அனுபவித்தாலும் ஒரே மாதிரியான பயனைத்தானே தரும் பக்தர்கள் குறிப்பிட்ட ஒரு சமயத்தைச் சார்ந்தவர் களாக இருந்து, அதில் கூறப்பெற்ற சடங்குகளை இயற்றுபவர்களாகவும், அச்சமயப் பெயரில் பேசப்பெறும் அனைத்தையும் தம்புபவர்களாகவும் இருத்தல் வேண்டும் என்று கூறுவது அறியாமையின் பாற்படும். ஒரு சில பக்தர்கள் அவ்வாறு இருப்பினும் தவறு இல்லை. பக்தி அனுபவம் எத்தகையது : பக்தி அனுபவத்தில் ஏற்படும் சில நிலைகள், அதாவது: மானிட ஆன்மா இறைப் பொருளுடன் கொள்ளும் நேரடித் தொடர்புகள், நம் போன்ற மனநிலையிலிருந்து அறிய முடியாதவை; உணர முடியாதவையுங்கூட. மணி வாசகர் போன்ற ஒருவர், கல்விக் கடலைக் கரைகண்டு ஒரு பெருநாட்டின் தலைமை அமைச்சராகவும் இருந்த ஒருவர் இறைவன் அற்புதமான அமுத தாரைகள் எற்புத் துளை தொறும் ஏற்றினன்' (அண்டப்-174, 5) என்று கூறும்பொழுது நமக்கு அந்த அனுபவம் சித்திக்காது என்பதை அறிந்திருப்பினும், அதனை உண்மையென்று ஏற்றுக் கொள்வது தவிர வேறு வழி இல்லை. பக்தியில் திளைப்பவர் காணும் காட்சிகள் கனவு. காண்பவர் காண்பது போன்ற, உண்மையற்ற மனப் பிராந்திகள் என்று கூறும் அறிவுவாதிகளும் உண்டு. உண்மையைக் கூறவேண்டுமாயின் மனிதனுடைய பொறி புலன்கள் ஒய்ந்து நிற்கும்பொழுதும், அவர்களுடைய உறுதி (will) தளர்ந்திருக்கும் பொழுதும் காணப்பெற்ற மனப் பிராந்தியாகிய காட்சிகளல்ல பக்தர் காணும்