பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 0 அ. ச. ஞானசம்பந்தன் சிலருக்கே அது முடிதாக உளது. போலியாகப் பூசையில் ஈடுபட்டு ஆடம்பரமான பூசை புரிவோரும், தமக்கு பக்தி உளது என நினைப்போரும் பிறரை நினைக்குமாறு செய்வோரும், மேலைநாட்டில் மருந்துகள் மூலம் ஒருமைப்பாட்டை அடைய முயலும் ஹிப்பிகளும் ஒரே இயல்புடையவர்களே. இக்காட்டுத் தத்துவவாதிகள் : தத்துவவாதியின் கருவி அறிவாகும். அதைக்கொண்டு யாவற்றையும் ஆராய்ந்து அவற்றின் இயல்புகளை உள்ள வாறு காண்பது அவனுடைய நோக்கமாகும். இனிச் சோதனை முலமே எதனையும் ஆய்ந்து காணவேண்டும் என்ற கொள்கையின் மறுதலையான கொள்கையுடைய தத்துவவாதிகளும் உளர். இந்நாட்டில் தோன்றிய ஆதி சங்கரர், தாயுமானார், மெய்கண்டார், கெளதம புத்தர் போன்றவர்களும் மேனாட்டில் தோன்றிய ஸ்பினோ ஸா (spinoza) போன்றவர்களும் இத்தொகுப்பில் அடங்குவர். இவர்கள் அறிவின் துணைகொண்டு பொருளை ஆராய்ந்து அவற்றின் இயல்புவழி இவற்றைப் பிரித்து இறுதியில் கடவுட் பொருள் பற்றியும் ஆய்வர். கடவுள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்காத ஒரு தத்துவவாதி கெளதம புத்தர்ஒருவரேயாவார். ஏனையோர்.அனைவரும். பக்தி மார்க்கத்தை மேற்கொள்ளாமல் ஆராய்ச்சி செய் வதன் மூலம் நித்தியப் பொருளை அறிந்து நிரூபிக்க முயன்றனர், ஓம் தத் ஸத்’ என்பதை நிரூபிக்க முயன்றசங்கரரும், பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அப்பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன் (கருணகர-6) என்று பாடிய தாயுமானாரும் அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கி மலர்ந்துள தாம் (சிவ. போ. 1) என்பதன் மூலம் மூலப்பொருள் உண்மையை நாட்ட முயன்ற மெய்கண்டாரும் தத்துவ வாதிகளே. . .