பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் e 51 பக்தர்களின் கருவி கரணங்கள்: இவர்களின் எதிராக அறிவின் துணையை நாட முடியாதவர்களும், எளிய மக்களும் மேற்கொள்ள முயன்றது பக்தி வழியேயாகும். அறிவினால் ஆயமுடியா ததைப் பிரார்த்தனை என்பதன் மூலம் காணமுயல்வதே பக்தி வழியாகும். பிரார்த்தனை ஒன்றே பக்தி வழியின் நுழை வாயிலாய் இருந்தும், அது யாவர்க்கும் எளிதிற். கிட்டக்கூடிய வழியாக இருந்தும் ஒரு சிலரே இதனை முயலத் தலைப்படுகின்றனர்." பக்தர்கள்: பக்தி வழியில் செல்லும் அடியார்களும் நம்மைப் போலவே உண்டு, உடுத்திப் பேசி வாழ்கின்றவர்களே யாவர். அவ்வாறானால் நமக்கும் அவர்கட்கும் வேறுபாடு யாதாய் இருக்கும் என்ற வினா நியாயமானதே. சேய் போல் இருக்கும் இந்த ஞானிகளை அறிவதுதான் எவ்வாறு? நம்மைப்போன்ற உடம்புடைய இவர்களின் பொறி புலன்கள் நம்முடையவை போன்று தொழிற். படுமா? படாவா? நம்மைப் போன்று உடம்பு கொண் டிருப்பினும் இவர்களுடைய கருவி, கரணங்கள் பசு கரணங்களல்ல; பதி கரணங்களே' என்று நம்மவர் கூறினர். இதனை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கட்கு இயேசுநாதர் பற்றி மிடில்டன் மர்ரே' என்ற அறிஞர் கூறிய சொற்களை நினையூட்ட வேண்டும், மிடில்டன் 1. Mysticism finds working expression not in intellectual speculation but in prayer. Prayer is the mystical act, and prayer is not the privilege of the few. The tragedy is that so few use it." – Mysticism in Religion P. 36.