பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 0 அ. ச. ஞானசம்பந்தன் மர்ரே இயேசு பக்தி வழிச் சென்றவரா என்ற வினாவை ஆயத்தொடங்கி ஆம் என்ற முடிவுக்கு வந்தவுடன் முற்றிலும் பக்திவழிப்பட்டவராகிய நாசரத் வாசியாகிய இயேசுவுக்கு இருந்த கருவி கரணங்கள் மானிடர்க்குரிய கருவி கரணங்கள் அல்ல என்றும் புதிய கருவி கரணங்கள் என்றும் கூறினார்.' மனிதருக்குரிய கருவி கரணங்களைப் பெற்றிருந்தும் இறைவன் அருளைப் பூரணமாகப் பெற்ற இந்தப் பக்தர் களின் கருவி கரணங்கள் இறைத்தன்மை பெற்றுவிடு கின்றன. அதனையே மிடில்டன் மர்ரே புதிய கருவி கரணங்கள் எனப் பேசுகிறார். இப்புதிய கருவி கரணங் களைப் பெற்ற பெரியோர்கள் செய்யுஞ் செயல்கள் அவர் களுடையவை அல்ல. அவர்கள் எது செய்யீனும் அவை இறைவன் செயல்களே என இந் நாட்டார் கூறினர். தருக்க முறைப்படி காணினும் பதி கரணங்களைப் பெற்ற வர்கள் செய்யுஞ் செயல்கள் பதியின் செயல்களேயாம் அல்லவா? இக்கருத்தை மணிவாசகப் பெருமான் மிக விளக்கமாக சித்த மலம் அறுவித்துச் சிவமாக்கி எனை யாண்ட அத்தன்' (அச்சோ 1) எனவும் சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன்' (தோாணாக்-7) எனவும் கூறுகிறார். - பக்தி வழியில் ஈடுபடுவோர் இறைவனை எங்கோ, வாக்கு மனோலயங் கடந்த ஒகு பொருளாக, கற்பனை கடந்த சோதியாகக் கருவதும் இல்லை; அவ்வாறு உணர் 2. Middleton Murry discusses the question whether He was a Mystic, and concludes that “in a great and complete mystic like Jesus of Nazarath the human organism actually becomes a new kind of organism." — bid P. 39.