பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 53 வதும் இல்லை. அவர்களைப் பொறுத்தமட்டில், இறைப் பொருள் அவர்கள் உள்ளேயே உறையும் ஒன்றாய், அவர் களுடன் எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டதாய், எவ்விடத்திலும் காண்டற் குரியதாய், அனுபவிப்பதற்: குரியதாய் இருக்கின்றதை அறிகிறோம். கண்ணால் யானுங் கண்டேன் காண்க : -திருவா. அண்டப். 58 'எளிவந்திருந்து இரங்கி எண்ணரிய இன்னருளால் ஒளிவந்தென் உள்ளத்தி னுள்ளே ஒளிதிகழ' -அம்மா 81 என்பன போன்ற திருவாசக அடிகள் இக் கருத்தை வலியுறுத்தல் காணலாம். இவ்வாறு அப்பொருளுடன் நேரடித் தொடர்பு கொள்ளவில்லையாயின் இவர்கள் சொற்கள் பொருளற்ற வெற்றுரைகளாக அல்லவோ முடியும்? திருஞானசம்பந்தர், சுந்தரர் போன்றோர் தம் பாடல்களைப் படிப்பவர் இன்ன பயளை அடைவர் என்று: கூறுவது எவ்வாறு பொருத்தமுடையதாகிறது? 'ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர்! ஆணை நமதே!' - –2-85-11. 'அந்த உலகு எய்தி அரசாளுமதுவே சரதம் ஆணை நமதே!" -3-78-11 என்பன போன்ற சொற்களால் ஞானசம்பந்தர் கூறுவ தோடல்லாமல் தம் சொற்கள் இறைவனுடைய சொற். களே என்னும் பொருளில், இறைவனில் உறைபவர், 'மலையினார் பருப்பதந் துருத்தி மாற்பேறு மாசிலாச்சீர் மறைக்காடு நெய்ததானம்