பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.54 அ. அ. ச. ஞானசம்பத்தன் நிலையினான் எனதுஉரை தனது உரையாக நீறணிந்து ஏறு உகந்து எறிய நிமலன்' -1-76-1. என்றுங் கூறியுள்ளமை இவர்கள் காரணங்கள் பதிகர ணங்களே என்ற கூற்றை வலியுறுத்துகின்றன. இறைவன் தம்முட் புகுந்து தம்மை முழுதுமாகவே ஆட்கொண்டு விட்டான் என்பதை இப்பெரியேர்ர் கூறுவது அறிதற் அபாலது. "தான் ஒட்டி வந்து, என்தனி நெஞ்சை வஞ்சித்து ஊன் ஒட்டி நின்று, என் உயிரில் கலந்து, இயல் வான் ஒட்டுமோ?......... ......... * } -திருவாய், 1-7-7. என்றும், 'கமலக்கண்ணன், என் கண்களில் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே; அமலங்கள் ஆக விழிக்கும்; ஐம்புலனும் அவன்' --திருவாய், 1-9-9. ‘‘... ... ... ... ............ என்னால் தன்னை இன்தமிழ் பாடிய ஈசனை ............ - திருவாய். 7-9-1. என்றும் நம்மாழ்வார் பாடியுள்ளமையை நோக்கினால் இப்பெருமக்களுடைய கருவி கரணங்கள் இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற பிறகு, பதி கரணங்களாகவே ஆகி விட்டன என்பதை வலியுறுத்தும். ஈறறில் உள்ள மேற் கோளில் என்னால் தன்னை இன்தமிழ் பாடிய' என்பதில் தன்வினைச் சொல்லாகிய பாடிய' என்ற சொல்லைக் கவனிக்க வேண்டும். 'என்னால் பாடுவித்த என்று பிற வினைச் சொல்லைக் கூடப் பயன்படுத்தாமல் பாடிய' என்றே கூறிவிட்டமையின் இது முன் சொன்னவற்றை நன்கு வலியுறுத்தல் காணலாம்.