பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 55 பக்திவழிச் செல்லும் பெரியோர்கள் இறைவனுடன் தொடர்பு கொண்டே வாழ்ந்தனர் என்பதை மேலை நாட்டாரும் ஒப்புக் கொண்டுள்ளனர். கோகுல் (Gogபel) என்ற பெரியார் தாம் எழுதிய ஏசுவின் வாழ்க்கை' (Life of Jesus) என்ற நூலில் பின்வருமாறு எழுதுகிறார். 'இயேசுவின் வாழக்கையில் யாண்டுங் காணப் பெறாத தனித்துவம் யாதெனில் இறை வனுடைய சந்நிதானத்திலேயே தாம் எப்போ தும் இருப்பதாக அவர் உணர்ந்ததேயாம் வாழ்வு முழுதும், பொறி புலன்களோடு கூடிய தற்போ தத்தில் அவர் இறைவனோடு விடாமல் தொடர்பு கொண்டிருந்தார். இயேசுவைப் பொறுத்தமட்டில் இறைவன் ஏதோ ஒரு நுண்மை யான கருத்துப் பொருளாக மட்டும் இல்லை; வாழ்வில் எந்நேரமும் ஊடாடுகின்ற ஒர் உள் பொருளாகவே இருக்கிறான். இறைவன் அவரு டைய மனத்திலோ, கற்பனையிலோ, கனவிலோ தோன்றுபவனாக இல்லாமல், அவரால் அனுப வித்து உணர்ந்து, அறியப்படும் பொருளாகவே உள்ளான்.' 1. Goguel in his Life of Jesus states. “The unique originality of Jesus consists in His sense of the presence of God, in that conscious and living communion with God in which He lives. To Him God is no abstract idea, but an immediate and living reality; God in Him, not a God conceived with the mind, or imagined or dreamed, but a a God who is experienced, felt, known.” – Mysticism in Religion P. 40.