பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 அ. அ. ச. ஞானசம்பந்தன் இம் மேற்கோளை எடுத்துக்காட்டி விட்டு டீன் இன்ஞ்’ (W. R. Inje) தம்முடைய சமயத்தில் பக்தி' என்ற நூலில் "இயேசு அறிவுறுத்தல் பணியை மேற்கொள்ளும் பொழுது ஏனைய ஆசிரியர்களைப் போல் அல்லாமல் எல்லையற்ற அதிகாரம் பெற்ற ஒருவர் போலவே அறி வுறுத்தினார். அவருடைய அதிகாரம் அவருடைய தன்று. இறுதியான அதிகாரமாகிய அது இறைவனுடைய அதிகாரமேயாகும்” என்றார். இன்ஞ்' கூறிய இக்கூற். றுடன் ஞானசம்பந்தர் ஆணை நமதே என்று கூறும் கூற்றையும் ஒப்பிட்டால் இது எவ்வளவு உண்மையானது என்பதை அறிய முடியும். பக்தன் முக்காலமும் உணர்தல் : அடியார்கள் என்றும் பக்தர்கள் என்றும் கூறப்பெறும் இவர்கள் தத்துவவாதிகளால் சாதிக்க முடியாத ஒன்றை யும் சாதிக்கக் கூடியவர்கள். அதுவே. எதிர் காலத்தை அறிதல் என்பதாகும். தத்துவவாதி அறிவின் ೧T கொண்டு ஆய்பவனாதலின் எதிர்காலம் தன் அறிவுக்கு அப்பாற்பட்டது என்பதை அறிகிறான். தன்னுடைய அறிவின் பயனாகக் கிடைத்த தருக்க முறையில், சுருதி. யுக்தி, அனுமானம் என்ற மூன்றையுங் கொண்டு எதிர் காலத்தை இவ்வாறு இருக்கும்’ என்று கணிப்பதுடன் தத்துவவாதி நின்று விடுகிறான். உள்ளுணர்வு. தெய்வீக ஆற்றல் முதலியவற்றின் உதவியால் எதிரது நோக்கும் ஆற்றலைத் தத்துவவாதி பெறாததன் காரணம் உள்ளுணர்வு, தெய்வீக ஆற்றல் என்ற இரண்டையுமே அவன் ஏற்றுக் கொள்வதில்லை என்பதுதான். 2. “He taught as one having authority, and not as scribes. His authority was supreme and ultimate authority, the Holy Sprit of God Himself.” — bid P. 40.