பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 57 இதன் எதிராக, பக்தன் தெய்வீக ஆற்றலையும்,அதன் பயனாக விளைகின்ற உள்ளுணர்வையும் பெரிதும் நம்பி வாழ்கின்றவன். இவ்வாற்றல், உள்ளுணர்வு என்பவற்றின் துணைகொண்டு எதிர்காலம், நிகழ்ச்சி என்பவற்றை அறிகிறான் பக்தன். அதேபோல் அவன் காலத்திற்குப் பன்னுாறு ஆண்டுகளின் முன்னர் நடந்தவற்றையும் அவனால் கண்டு உணரமுடிகின்றது. இதன் காரணம் யாது? தத்துவவாதி துணைக்கொள்ளும் அறிவானது, காலம் என்பதனை அறிந்து அதற்குட்பட்டு நடப்பதாகும். பக்தனின் உள்ளுணர்வு தெய்வீக ஆற்றலையே துணை யாகக் கொண்டது. தெய்வம் காலங்கடந்த ஒன்று ஆகலின் பக்தனுக்கு முக்காலமும் (இறப்பு, நிகழ்வு, எதிர்வு) இல்லையாய் விடுகிறது. இது பற்றிக் கூறவந்த இன்ஞ் தெய்வீக ஆற்றலால் பக்தர்கட்குத் தோன்றும் உள்ளுணர்வு பற்றிப் பிளேட் டோவும் அறிந்திருந்தார் என்று கூறுகிறார். 'பக்தி அனுபவத்தில் உள்ளுணர்வு மூலம் திடீரென்று ஒரு காட்சியைப் பெறுதல் சாதாரணமாக நடக்கக் கூடியதே. பிளேட்டோவின் ஐயத்திற்கிடமற்ற ஏழாவது கடிதத்தில் தெய்வீக ஆற்றல் மூலம் அகமனத்தில் பளிச்சிடும் சில வற்றை 'பொள்ளெனத் தோன்றும் ஒளி' என்று கூறு கிறார். 1 இக் கூற்று எத்தனைத் தூரம் உண்மையானது என்பதை விளங்கிக் கொள்ள ஒர் உதாரணத்தைக் காணலாம். திருநாவுக்கரசர் அப்பூதியடிகள் வீட்டில் 1. “The apparent suddenness of the mystical revela tion is quite normal; Plato in his undoubtedly genuine Seventh Letter speaks of the “leaping spark” by which divine inspiration flashes on the mind." – Mysticism in Religion P. 43