பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 0 அ. ச. ஞானசம்பந்தன் விருந்துண்ண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அப்பூதி யின் மூத்த மகன் அந்த நேரத்தில் பாம்பு கடித்து இறந்து விடுகிறான். அதனை மறைத்து அப்பூதியார் நாவரசருக்கு விருந்திட முயல்கிறார். நாவரசர் பூசை முடித்து அனைவருக்கும் திருநீறு வழங்கும் நேரம். ஒவ்வொரு வ ராகத் திருநீறு வாங்கிக் கொள்கின்றனர். முத்த மகனைக் காணாமையின் இவர்க்கு மூத்த சேயையுங் காட்டும்' (அப் புரா. 32) என்று கேட்கிறார் வாக்கின் வேந்தர். இக்கட் டான இந் நிலையைச் சமாளிப்பதற்காக அப்பூதி யார் பெயய்யும் அல்லாத மெய்யும் அல்லாத முறையில் 'இப்போது இங்கு அவன் உதவான் (அப்பூதி-32) என் கிறார். இந்நிலையில் நாவரசர் மனத்தில் ஒர் உண்மை பளிச்சிடுகிறது. அது இறைவன் அருளாலேயே பளிச்சிடு கிறது என்கிறார் சேக்கிழார். அவ்வுரை கேட்டபோதே அங்கணர் அருளால் அன்பர் செவ்விய திருவுள்ளத்து ஓர் தடுமாற்றம் சேர நோக்கி 'இவ்வுரை பொறாது என்உள்ளம் என்செய்தான் இவற்கொன்று உண்டால் மெய்விரித் துரையும்' என்ன விளம்புவார் விதிப்புற்று . அஞ்சி' - அப்பூதி 33 இரண்டாம் அடியில் நாவரசர் உள்ளத்தில் ஒரு தடுமாற்றம் தோன்றிற்று என்றும் அதுதானும் இறை யருளால் தோன்றிற்று என்றும் சேக்கிழார் கூறுவதுதான் முன்னர் பிளேட்டோவால் குறிக்கப்பெற்ற 'பொள் ளெனத் தோன்றும் ஒளி' (leaping spark) என்று அறிய லாம். - - - - துன்ப அனுபவங்கள் : பக்தர்கள் அனைவர் வாழ்க்கையிலும் அவர்கள் பட்ட அன்பம் அல்லது அல்லல் மூக்கியமான இடத்தைப்