பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை தத்துவமும் பக்தியும் என்ற தலைப்பில் வெளிவரும் இந்நூல் நான்கு கட்டுரைகளைக் கொண்டுள்ளது. சைவ சமயம்", ஒன்பது பதினொன்றாம் திருமுறைகள் என்ற இரு கட்டுரைகள் தவிர ஏனைய கட்டுரைகள் சொற் பொழிவை ஒலிப்பதிவு செய்து பின்னர் எழுதப்பெற்றவை யாகும். எனவே அவற்றின் நடை ஓரளவு சொற்பொழிவு நடையாகவே அமைந்திருக்கும் முதல் சொற்பொழிவு பூ.சா. கோ கலைக்கல்லூரியில் நிகழ்த்தப்பெற்றது. முதல் கட்டுரை தமிழாசிரியனாகிய என்னுடைய எல்லைக்கு அப்பாற்பட்டது. ஆனால், தத்துவம் பக்தி என்பவை பற்றி தத்துவ இயலார்தாம் பேச உரிமையுடையவர்கள் என்ற கொள்கையின் எதிராக ஒரு தமிழ் மாணவன் அது பற்றி என்ன நினைக்கின்றான் என்பதைப் பார்க்க வேண்டும் என்பதற்காக அத் தலைப்பைத் தந்து பேசு மாறு பணித்தார்கள் கலைக்கல்லூரியார். எந்த அளவு என் கடமையில் வெற்றி ஏற்பட்டுள்ளது என்பதைக் கணிக்கும் பொறுப்பைக் கற்பாரிடம் விட்டுவிடுகிறேன். 'திருமந்திரப் பொருள் நிலை' என்ற சொற்பொழிவு திருமந்திர மாநாட்டில் செய்யப்பெற்றது. பிறர் ஒருவர் பேசவேண்டிய தலைப்பை அவர் வராத காரணத்தால் திடீரென்று பேச நேர்ந்தது. எனவே இயல்பான குறைகள் அதில் காணப்படலாம். சைவ சமயம் என்பது சைவ சித்தாந்த மகா சமாஜத்தில் திருநெல்வேலியில் நிகழ்த்திய தலைமையுரையாகும். காலத்துக்கேற்ற முறையில் சமயக் கருத்துக்களை வழங்கினாலொழிய சைவ சமயம் அணு