பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VII யுகத்தில் புறக்கணிக்கப்படும் என்ற என்னுடைய அச்சத்தை வெளிப்படுத்துகிறது அக்கட்டுரை. ஒன்பது பதினொன்றாம் திருமுறைகள் சென்னைப் பல்கலைக் கழகத் 'திருமுறைக் கருத்தரங்கில் பேசப் பெற்றது. காலங்காலமாக இருந்துவரும் சிலகருத்துக்கள் எவ்வளவு உள்ளீடற்றவை என்பதைத் தருக்க முறையில் நிறுவ முயன்றுள்ளேன். கருத்து வேற்றுமைக்கு மிகுதியும் இடங்தரும். இதுபற்றி அறிஞர்கள் கருத்து வழங்குவரா யின் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளேன். பற்பல காலங்களில் பேசப்பெற்ற இவை இன்று ஒரு தொகுப்பாக வெளிவருகின்றன. கங்கை புத்தக நிலையத் தார் இதனைத் துணிவுடன் வெளியிட முன்வந்துள்ளனர், தமிழ் நூல்கள் கதைகளாகவோ நாவல்களாகவோ இல்லாதிருப்பின் எவ்வாறு வரவேற்கப்படும் என்பதை நன்கு அறிந்தவன் நான் என்றாலும் கங்கை உரிமை யாளர் துணிவுடன் வெளியிட முன் வந்தமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள் உரியன. சென்னை அ. ச. ஞானசம்பந்தன் 31-3-1994