பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 இ. அ. ச. ஞானசம்பந்தன் எனவே அடியார்கள், பக்தர்கள் எனப்படுவோர் இத், தகைய அல்லல்கட்குச் சிறிதும் அஞ்சுவதில்லை என்பது. பெறப்படுகிறது. மணிவாசகர் போன்றவர்கள் பட்ட அல்லலுக்கு எல்லையே இல்லை. ஆனால் அவர் அத்தகைய அல்லற்பட்டமையாலேயே திருவாசகம்’ போன்ற ஒர் அனுபவ நூல் மனித சமுதாயத்திற்குக் கிடைத்தது. இவர்கள் எப் பிழையும் செய்யாவிடினும் இவர்களைத் துன்பம் சார்வது ஏன்? பிறர் பொருட்டாகத் துன்பத்தை ஏற்றலில் ஒரு சிறப்பு அமைந்துவிடுகிறது. தான் செய்த தவறுக்காகத் துன்பத்தை ஏற்க வேண்டிய மனிதன் எவ்' வாறாயினும் அதனைக் கீழே தள்ளிவிடவே முனை கின்றான். ஆனால் மக்களுள் உயர்ந்து நின்ற மகாத். மாக்கள் துன்பத்தை இன்முகத்துடன் ஏற்று அனுபவிப் பதன் உட்கிடக்கை யாது? பிறர் பொருட்டு அனுப விக்கப் பெறும் துன்பம் அனுபவிப்பவர்கள் மனத்தில் உண்மையில் ஒரு தெம்பையும் ஊற்றத்தையுமே தருகிறது. எனவே அவர்கள் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்கின்றனர். ஒருவர் தாமே விரும்பித் தம் கண்களை இழக்க ஒருப் படுவதில்லை. ஆனால் தம்முடைய இரண்டு கண்ணையும் தம்மால் அன்பு செய்யப்பெறும் குடுமித் தேவருக்கு மனமுவந்தளிக்கிறார் கண்ணப்பர். கட்டுக்குள் அடங்காத அனுபவம் : இத்தகைய பக்தர்கள், அன்பர்கள், அடியார்கள் என்பவர்களின் பக்தி அனுபவத்தைப்பற்றி ஆராயும் பொழுது இரண்டு குற்றங்கள் வாராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதலாவது இவர்களை ஒரு குறிப் பிட்ட சமயம் என்ற விலங்கினுள் அகப்படுத்தல் கூடாது. இரண்டாவது நடைமுறையில் வழங்கும் சமயங்களுள் (Established religious denominations) ஏதாவது ஒன்றின் அடிப்படையை மட்டும் மனத்துட்கொண்டு இவர்கள் செயல்களை ஆராய்தல் கூடாது.