10 நல்ல சான்ஸ்’ தெரியும். தந்தையின் ஆணை என்று நடராஜனுக்கு மட்டும் நன்கு தன் தம்பி குமாருக்கும் லட்சுமி என்கிற பெண்ணை நடராஜன் மணமுடித்து வைத்தான். குமாரின் வரு மானத்தில் மட்டும் முன்னேற்றம் இல்லை. செலவினங் கள் வர வர அதிகரித்துக்கொண்டே இருந்தது. இரண்டு கல்யாணத்தில் எவ்வளவோ சுருக்கி செலவு செய்தும் ரூபாய் ஆயிரம் வரை ஆகியிருந்தது. நடராஜன் நாண யத்தை நம்பி ஒரு மார்வாடி ஓரளவு கடன் கொடுத்து வந்தான். . இந்த சமயத்தில் சேகர் எஸ். எஸ். எல். சி. முடித்து விட்டான். அடுத்த வருடம் இன்டர்' படித்துவிட்டு, ஐந்து வருடம் டாக்டர் படிப்பு படிக்க வேண்டிய திருந்தது. ரூபாய் ஐந்தாயிரம் வரை இருந்தால்தான் தன் தம்பி சேகர் டாக்டராக முடியும். இதை நினைத்தால் நடராஜனுக்கு மலைப்பாக இருந்தது, ஆனாலும் அவன் அதைரியப்பட வில்லை. மார்வாடியின் உதவியைக்கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் சாதித்து வந்தான். பாளையங் கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் சேகர் 'இன்டர்` வாசிக்க ஆரம்பித்தான். r இன்டர்' முடிக்க இரண்டொரு மாதங்களே இருந் தன. சேகர் படிப்பிலே புத்திசாலியாக இருப்பதைக் கண்ட பலரும் அவனைப் போற்றினார்கள். ஒவ்வொரு பாடத்திலும் முதல் பையனாக சேகர் இருந்து வந்தான். சேகருக்கும் சீக்கிரம் கல்யாணம் முடிக்கவேண்டு மென்று வள்ளியம்மாளுக்கு ஒரே ஆசையாக இருந்தன. என்னதான் பணக்கஷ்டம் இருந்தாலும் தாயின் மனப்படி
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/11
Appearance