ஆசைத்தம்பி நடக்கவேண்டும் என்பதே நடராஜனின் . 11 குணமாக இருந்தது. சேகருக்கு ஏற்ற பெண்ணை பார்க்கும்படி தாயாரிடம் கூறினான். ஆண்களைவிட ஜனத்தொகையிலே பெண்கள் அதிகமாக இருக்கும்போது மணமகளுக்கா பஞ்சம்? சர்வ லட்சணமுடைய லீலா என்ற பெண்ணை தன் மகனுக்கென்று தேர்ந்தெடுத்தாள் வள்ளியம்மாள். ஜாம் ஜாம் என கல்யாணம் முடிந்தது. இளையவனான் மாணிக் கத்திற்கு ஒரே ஆனந்தம். தந்தை இல்லையே என்ற எண்ணங்கூட அவனுக்குத் தோன்றவில்லை. மூன்று 'மதினி, மார்களோடு அரட்டை அடிப்பதிலே பொழுது போவதுகூட தெரிவதில்லை. 5. முதல் இரவு சேகரின் கல்யாணத்திலே ஆடம்பரம் இல்லை படாடோபம் இல்லை என்றுதான் சீர்திருத்தவாதிகள் சொல்லிக்கொண்டார்கள். ஏதோ அம்மி மிதித்து அருந் ததியைப் பார்க்கும் அர்த்தமில்லாத பழக்கமும், புரோ கிதத்துக்கு பார்ப்பனர் வருவதும் எப்படியோ நிறுத்தப் பட்டு விட்டது. அரிசிப்பஞ்சம் இருந்ததால் 'அறுசுவை. உணவு அடியோடு நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு பதிலாக தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டது. அதுமட்டுமல்ல; லீலாவின் தகப்பனார் தன்னை ஒரு சுயமரியாதைக்காரர் ’ என்று சொல்லிக்கொள்பவர். அப்படி இருந்தும் தன் மகள் கல்யாணத்திற்கு ராசிப் பொருத்தம். ராகுகாலம், நாள் நட்சத்திரம் ஆகியவைகளை பார்த்துதான் கல்யாணம் நடத்தினார். 2
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/12
Appearance