உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைத்தம்பி 17 விட்டுக் கொடுக்கிற மனப்பான்மை பிராமணர் களுக்கு இல்லாததால்தான் 'வகுப்புவாரி பிரதிநிதித்வம் என்ற விகிதாசார முறையை சட்ட பூர்வமாக ஜஸ்டிஸ் கட்சியினர் சென்னை மாகாணத்தில் கொண்டு வந்தனர். இதை வகுப்புவாதம் என்று பிற்போக்கு திட்டம் என்றும் பிராமணர்கள் எதிர்த்தார்கள். விலைவாசிகளை விஷம்போல ஏறவைத்து கொள்ளை லாபமடிக்கும் கள்ள மார்க்கெட்காரர்கள் நிர்ணய விலை திட்டத்தை எதிர்த்தால் மதிப்பு கொடுக்க முடியுமா? அதைப் போலவே பிராமணர்களின் எதிர்ப்பை யாரும் லட்சியம் செய்ய வில்லை. அந்த திட்டத்தின் பயனால் சேகருக்கு வைத்திய கல்லூரியிலே இடம் கிடைத்தது. வைத்திய கல்லூரியிலே இடம் கிடைத்த மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், வைத்திய படிப்புக்கு செல்ல மார்வாரியிடம் கடன் வாங்க வேண்டுமே என்ற கவலை நடராஜனுக்கு இருக்கத்தான் செய்தது. தன் தம்பிகளின் கல்யாணத்திற்கே நடராஜன் கடன் வாங்கியிருந்தான். மேலும் மேலும் கடன் வாங்க அதிலும் தன் தம்பி சேகர் படிப்புக்காக எதுவும் செய்ய நடராஜன் தயங்கவே இல்லை ஏனெனில் தன் தந்தையின் ஆவலை எப்படியும் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு இருந்தது. விடிந்தால் சேகர் சென்னை புறப்பட வேண்டும். கல்யாணமாகி இரண்டு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள் பிரிய வேண்டியதாய் இருந்தது. இந்தக் கவலை எல் லோரையும்விட லீலாவுக்குத்தான் அதிகமாய் இருந்தது. தானும் தன் புருஷன் கூடப்போய், தன் புருஷனுக்கு வேண்டிய பணிவிடைகளெல்லாம் செய்துகொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/18&oldid=1740979" இலிருந்து மீள்விக்கப்பட்டது