உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தந்தையின் ஆணை சென்னையிலேயே படிப்பு முடியும் வரை இருந்தால்; எவ்வளவு ஆனந்தமாக பொழுதுபோகும்; என்றெல்லாம் எண்ணி எண்ணி பார்த்தாள் ! ஆனால் கூடப் போவது முடியக்கூடிய காரியமா ? கடன்பட்டு படிக்கச்செல்லும் சேகர் காதலியையும் உடன் அழைத்துச் செல்வது நடக்கக் கூடியதா? ஊஹும்! சேகர் லீலா விஷயமாவது ஓரளவு பரவாயில்லை. ஆனால் எண்ணற்ற இளந்தம்பதிகள் ஒருவரை ஒருவர் வறுமையின் காரணமாக பிரிந்து இந்தியாவிலே சித்திர வதைப்படுகின்றனர். எத்தனையோ ஏழை குமாஸ்தாக்கள் மனைவியை ஊரிலே விட்டு விட்டு பம்பாய், கராச்சி, கல்கத்தா ஆகிய தூர ஊர்களுக்குச் சென்று தங்கள் ஜீவனத்தை நடத்துகிறார்கள். வருஷத்துக்கு ஒருமுறை ஊர் வந்து குழந்தை குட்டி மனைவியுடன் ஒரு பத்து நாள் தங்கிப்போவது அபூர்வம். இதைப் போலவே பல ஏழை முஸ்லீம்கள் இளம் மனைவிகளைப் பிரிந்து ரங்கூன், சிங்கப்பூர் போன்ற இடங்களிலே இன்னல் படுகின்றனர். இவர்கள் எல்லோரையும்விட அதிகமாக, இந்த நாட்டிலே எந்த வேலையும் இல்லாதபடி, இலங்கை தேயிலை-ரப்பர் தோட்டங்களிலும், மலேயா, ஆப்பிரிக்கா போன்ற அன்னிய நாடுகளிலும் தாய், தந்தை, மனைவி, மக்கள் ஆகிய அனைவரையும் பிரிந்து பிழைக்க சென்ற தமிழர்கள், அங்கும் பிழைப்பு இல்லாமல், திரும்பவும் வழியில்லாமல் செத்து மடிந்துகொண்டு இருக்கிறார்கள். இதையெல் லாம் கவனிக்கும்போது சேகர் லீலா பிரிவு சாதாரண மானது. சேகர் சந்தோஷமாகவே புறப்பட ஆயத்த மானான். எல்லோரிடமும் சேகர் விடை பெற்று புறப் பட்டான். போகும்போது தன் தம்பி சேகரிடம் தந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/19&oldid=1740980" இலிருந்து மீள்விக்கப்பட்டது