. ஆசைத்தம்பி 19 சாகும்போது கூறிய வார்த்தைகளை அப்படியே நடராஜன் கூறினான். கவனித்து படிக்கிறேன் அண்ணா'-என்று சொல்லிவிட்டு சேகர் வண்டியில் ஏறினான். வண்டியும் புறப்பட்டது. அது மறையும் வரை எல்லோரும் வாசலில் நின்றவாறு பார்த்துக்கொண்டே நின்றார்கள். சேகரும் தான் மறையும் வரை நாகரீகமாக கைக்குட் டையை கையில் எடுத்து வீசிக்கொண்டே சென்றான். அப்போது தன் தம்பி வேகமாக ஓடி வருவதைப் பார்த்து சேகர் வண்டியை நிறுத்தினான். மாணிக்கம் ஓடி வந்து ஒரு போட்டோவை சேகர் கையில் கொடுத்தான் அது தந்தையின் படம் என்பதை அறிந்த சேகர் சந்தோஷமாக வாங்கிக்கொண்டு " மாணிக்கம் ! நீ நன்றாக படி என்று சொல்லிவிட்டு வண்டியை ஓட்டச் சொன்னான். 7. படாடோபம் 7. " பட்டணம் வந்து சேர்ந்த சேகர் நேரே கல்லூரிக்கு வந்து சேர்ந்து தன் படிப்பு வேலையில் தீவிரமாக ஈடு பட்டான். தான் சுகமாக வந்து சேர்ந்த விபரத்திற்கு ஊருக்குக் கடிதமும் போட்டான். அந்தக் கடிதத்திற்கு உடனே பதில் வந்தது. சென்னை வந்ததற்கப்புறம் அது தான் முதல் கடிதமாக இருந்ததால்...... அதைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்தது. அதிலும் தன் மனைவி ஏதேனும் எழுதியிருப்பாளோ என்ற எண் ணம் வேறு அவன் ஆவலை அதிகப்படுத்தியது. கடிதத்தை பிரித்து வாசிக்க ஆரம்பித்தான். .1 சிரஞ்சீவி தம்பி சேகருக்கு கடவுள் கிருபையால் சகல பாக்கியமும் உண்டாவதாகவும். இப்பவும் இவ் 3
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/20
Appearance