ஆசைத்தம்பி 21 தன்மை என்பதை உணர்ந்தான். தன் அண்ணா எப்படி: யும் பணம் அனுப்புவார் என்ற தைரியத்தில் ஊருக்கு சேகர் கடிதம் எழுதினான். எழுதிய இரண்டு தினத்தி லேயே பணமும் வந்துவிட்டது. சேகருக்கு தன்னை அலங்கரிப்பதிலேயே அப்புறம் சிரத்தை எடுத்துக் கொண்டான். ஆடை பாதி ! ஆள் பாதி 1" என்று ஓர் பழ மொழி உண்டு. அது உள்ளபடியே சேகரைப் பார்த்தால் லட்சாதிபதியின் பிள்ளையோ என சந்தேகிக்கும்படி ஆகி விட்டது. பணக்கார வீட்டு பிள்ளைகள் முதற்கொண்டு சேகரை பிரம்மாதமாக நினைத்தார்கள். சேகருக்கு ஒரே வியப்பு. உலகமே வெளி வேஷம் ! புறையோடிக் கொண்டிருக்கும் புண்ணின் வாடையை தடுக்க வெண் பஞ்சும் தேவைப்படுவது போல, வறுமையின் கோர சுரூபத்தை மறைக்க நவ நாகரீக ஆடை தேவைப் படுகிறது இந்த உலக உண்மையை உணர்ந்த சேகர் ஆடை விஷயத்தில் மட்டு மல்ல, ஆடம்பர டாம்பீகத்தில்கூட அனாவசியமாக செலவு செய்ய ஆரம்பித்தான்: பள்ளி வாழ்க்கையைப்போல 'ஜாலி' வாழ்க்கை எதுவும் கிடை யாது என்பார்கள்! அதற்கு காரணம் கண்டபடி கவலை யற்று திரிவதற்கு பள்ளி வாழ்க்கையிலே வசதி கிடைக் கிறது எல்லோருக்கும், அவன் ஏழையாக இருக்கட்டும் அல்லது பணக்காரனாக இருக்கட்டும்; 'பணம் தேவை' என்று ஒரு கார்டு எழுதினால் போதும் மறுநாள் பணம் வந்துவிடும். இதை தவிர 'ஜாலி' யாக இருக்க வேறு என்ன வேண்டும்? வருகிற பணம் எப்படி வந்தது? சொந்த பணமா? கடன் வாங்கியதா? நாலு பேரை கெஞ்சி
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/22
Appearance