உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தந்தையின் ஆணை பிச்சை எடுத்ததா? என்பதெல்லாம் மாணவர்களுக்குத் தெரியாது: படிக்கிற பிள்ளைகளுக்கு அதையெல்லாம் தெரியப்படுத்தினால் அறிவு சரியாக வேலைசெய்யாது என்று கருதி பெற்றோர்கள் தாங்கள் பணம் பெற்ற முறையை எழுதப் பிரியப்படுவதில்லை. இதைப் போலவே சேகர் பணம் கேட்க கேட்க நட ராஜன் பணம் அனுப்பிக்கொண்டிருந்தானே தவிர மார் வாடியிடம் கடன் ரூபாய் இரண்டாயிரத்துக்கு மேல் போய்விட்டது என்று ஒரு வார்த்தைகூட தன் தம்பிக்கு எழுதவில்லை. சேகர் என்னதான் செலவு செய்தாலும் படிப்பிலே மாத்திரம் முதல் பையனாக இருந்தான். மூன்று வருஷத் திலும் பரீட்சையிலே நல்ல மார்க்குகள் பெற்று சேகர் தேறியிருந்தான். இதனால் நடராஜன் சந்தோசப்பட்டு மேலும் மேலும் தன் தம்பிக்கு பணம் அனுப்பத்தயங்க வில்லை. 8. குடும்ப நிர்வாகம் மார்வாடிக்கு கடன் ஏறிக்கொண்டே சென்றது. அப்படியிருந்தும் மார்வாடி மேலும் கடன் கொடுக்க மறுக்காமல் இருந்தான். இடையிடையே அந்த மார்வாடி நடராஜனிடத்திலே உன் தந்தையால்தானப்பா நான் முதலில் இந்த ஊருக்கு வந்தேன்; அந்த விஸ்வாசத்தினால் தான் உனக்கு உதவுகிறேன்'. என்று சொல்லிக்கொள் வான். - அந்த மார்வாடி சொன்னது என்னமோ உண்மை தான். முதன்முதலாக அந்த பாலைவன பட்டிக்காட்டிற்கு மார்வாடி வந்ததும் குடியிருக்க வீடில்லாமல் திண்டாடி னான். மார்வாடிகளைக் கண்டால் அந்த ஊர் மக்களுக்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/23&oldid=1740984" இலிருந்து மீள்விக்கப்பட்டது