ஆசைத்தம்பி 35 கொண்டார்கள்: சாப்பிட உட்கார்ந்த சேகருக்கு லீலா பரிமாறினாள் : அப்போது. சேகர் 'லீலாவை பரிமாற விடாமல் தடுத்து, தனக்கு அடுத்து உட்கார வைத்து அவளையும் சாப்பிடச் சொன்னான்: ஆனால் லீலாவோ கணவனுக்கு முந்தி மனைவி சாப்பிடக்கூடாது'- என்று சொல்லி எழுந்துவிட முயற்சித்தாள்: · பட்டிக் காட்டு வழக்கத்தை விட்டுவிடு '- என்று சேகர் கூறி சேலையைப் பிடித்துக்கொண்டான் லீலாவும் சாப்பிட உட்கார்ந்தாள்: லீலா வாயில் சேகர் பலகாரத்தை ஊட்டினான்: வெட்கப்பட்டுக்கொண்டே லீலா சாப் பிட்டாள். சாப்பாடு முடிந்ததும் சேகரை ஊஞ்சலில் உட்கார வைத்தாள் லீலா. பின்னர் வெற்றிலை மடித்து கொடுத்து ஊஞ்சலை ஆட்டினாள்; சேகர் பிடிலை எடுத்து வாசித்தான். லீலா நளினமாக ஆடுவதை சேகர் பார்த்து பரவசமடைந்தான். ஆகா! லீலா தனக்கு மனைவியாக கிடைத்தது மாபெரும்பாக்கியம் என்று நினைத்தான் சேகர். என்று - . அப்போது - பாலைவனம் வந்திருச்சுங்க' - ஜட்கா வண்டிக்காரன் கூறியதும், கற்பனை உலகில் இருந்து சேகர் விடுபட்டு, தன் வீட்டை வண்டிக்கார னுக்குக் காட்டினான். வண்டியும் சேகர் வீட்டின் முன் வந்து நின்றது. வண்டி சப்தத்தைக் கேட்டதும், வள்ளி யம்மாள், நடராஜன், குமார், மாணிக்கம் ஆகியோர் வாச லுக்கு ஓடிவந்தனர் சேகரை வரவேற்க. .. சேகர் எல்லோரையும் வணங்கினான். சேகர் ! வாப்பா! என்று அன்பாக அழைத்துச் சென்றான் நடராஜன். வரும் வழியில் வித விதமாகக் கற்பனை செய்துகொண்டு வந்த சேகருக்கு தன்னை வரவேற்க லீலா வாசலருகே வரவில்லையே என்று வருந்தினான். 5
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/36
Appearance