உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தந்தையின் ஆணை வீட்டுக்குள்ளே சென்ற பின்னும் கூட, லீலா சேகர் எதிரே தலையை நீட்டவில்லை. ஆண்களோடு அதிகமாக பழக வசதி இல்லாத பட்டிக்காட்டுப் பெண் தானே லீலா புதுப்பெண்ணைப்போல வெட்கப்பட்டுக்கொண்டே உள்ளேயே இருந்தாள். சென்னை சென்று திரும்பிய சேகருக்கு இது ஏனோ பிடிக்கவில்லை. 1* சேகருக்குப் பிரியமான பட்சண வகைகள் எல்லாம் அன்று தயாரிக்கப்பட்டது: மத்தியான சாப்பாட்டிற்குப் பின் ஊஞ்சலிலே போய் உட்கார்ந்தான் சேகர் ! ஆனால் கற்பனையில் கண்டபடி ஊஞ்சலை ஆட்டிவிட ஒருவரும் வரவில்லை, "லீலா வெற்றிலை கொண்டுவா என்று சேகர் ஊஞ்சலில் உட்கார்ந்தபடியே உள்ளே பார்த்துக் கொண்டே கூறினான் : சிறிது நேரத்திற்கெல்லாம் அண்ணா! அண்ணி வெத்திலை கொடுத்துச்சு' - என்று மாணிக்கம் வெற்றிலைத் தட்டை கொண்டுவந்து வைத் தான். அதிலும் சேகருக்கு ஒரு பெரிய ஏமாற்றமாக இருந்தது. அடுத்து பிடிலை எடுத்தான், அதை வாசிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே லீலா! நிச்சயமாக நாட்டிய மாடமாட்டாள்* என்பதை அவன் உணர்ந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால்...... 'உம் ! சுத்த பட்டிக் காடு- என்று சேகர் வாய் முணுமுணுத்திருக்குமா? அன்று மாலை உலாவப் போகவேண்டும் என்று நினைத்தான் சேகர். சென்னையில் இருந்தால்... திருவல்லிக் கேணி பீச்சுக்கும் நளினாவுடன் செல்வான். ஆனால் பாலைவனத்தில்? பீச் கிடையாது பெரிய ஏரி இருந்தது. அந்தப் பக்கம் போகலாம் என்று நினைத்தான். துணைக்கு நளினாவுக்கு பதில் யாரை அழைப்பது? ஏன் லீலாவை கூப்பிட்டால்...? லீலா வாழ்க்கைத் துணைவிதானே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/37&oldid=1740999" இலிருந்து மீள்விக்கப்பட்டது