ஆசைத்தம்பி 37 'லீலா! லீலா!" என்று கூப்பிட்டுக்கொண்டே சேகர் உள்ளே சென்றான். இரவு உணவைத் தயாரித்துக் கொண்டிருந்த லீலா எழுந்து நின்றாள். 'வாயேன் வாக்கிங் போய்வரலாம்' என்று லீலாவைப் பார்த்துக் கொண்டே சேகர் கூறினான். லீலாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. 'நீங்கள் போய்விட்டு சீக்கிரம் வாருங்கள்: சாப்பாட்டு வேலையை நான் கவனித்து வைக்கிறேன் . - என்று லீலா சொல்லிவிட்டாள். பிடிலை எடுத்துக் கொண்டு சேகர் வெளியேறினான். தனிமையாகப் போய் அமர்ந்து சேகர் பிடிலை இசைத்தான். நளினா கூடப் பாடுவது போல் அவன் மனதிலே ஏதோ ஒரு சக்தி ரீங்காரம் செய்தது. ஆனால் சேகர் மனதிலே அமைதி என்பதே இல்லை. 13. நாம் ஒன்று நினைத்தால்...? பட்டிக்காட்டு வாழ்க்கை சேகருக்கு எட்டிக்காயாக இருந்தது. பட்டணமாக இருந்தால் பாடும் ரேடியோ, ஓடும் வாகனாதிகள். நடமாடும் ஜனக்கூட்டம், நாடகம். சினிமா இன்னோரென்ன எல்லாம் இருக்கும். ஆனால் பட்டிக்காட்டில்.. அதுவும் பாலைவனத்தில்? விருதுநகர் பெரிய ஊர் தான் ; ஐம்பதினாயிரம் மக்களுக்கு மேல் வசிக்கிறார்கள் : வர்த்தகத் துறையில் விருதுநகரைத் தென்னிந்திய பம்பாய் என்று பூகோள ஆசிரியர்கள் கூறு கிறார்கள். இத்தனை பெயர் இருந்தும் அங்கே சென்ட்ரல் சினிமா, நியூ முத்து டாக்கீஸ், ராதா டாக்கீஸ் என்று மூன்று சினிமா தியேட்டர்கள் தான் இருக்கின்றன. அவை மூன்றும் லாபகரமாய் ஓடுவது என்பது குதிரைக் கொம்பை காண்பதுபோலதான். அப்படி இருக்க பாலை வனத்தில் சினிமா இருக்க முடியுமா ?
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/38
Appearance