உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தந்தையின் ஆணை இதையெல்லாம் கண்ட சேகர் பட்டண வாழ்க் கையே மேல் என்று நினைத்தான். அதிலும் தன் போக்கை அறிந்து கொள்ளாத மனைவியை நினைத்தால்... கிராம் வாழ்க்கை சேகருக்கு நரக வாழ்க்கையாக இருந்தது. கொஞ்ச நேரம் பிடிலும், அப்புறம் தன் அண்ணன் குமாரின் மகன் தேவராஜனுடனும் விளையாடிக்கொண்டே இருப்பான். தேவராஜனின் மழலைப் பேச்சில் சிறிது மகிழ்ச்சி அடைந்தான். மாலை நேரங்களிலே விருதுநகர் வரை நடந்து செல்வான். இப்படியே நாட்கள் கடந்து கொண்டிருந்தன. . அன்று சேகர் 'நல்ல தீர்ப்பு என்ற புத்தகம் படித் துக்கொண்டிருந்தான். அப்போது தன் அண்ணன் நட் ராஜன் அங்கு வருவதைக்கண்டு சேகர் எழுந்து நின்றான். பிறகு இருவருமே உட்கார்ந்தார்கள். சேகர்! நமது கிராமத்தில் சீக்கிரம் ஒரு ஆஸ் பத்திரி திறக்க வேண்டும்." இதைக் கேட்ட சேகரின் முகம் மாறியது. கிராம வாழ்க்கையை வெறுக்கும் சேகருக்கு அது பிடிக்குமா? அண்ணா! கிராமத்தில் ஆஸ்பத்திரி வைத்தால்... லாபகரமாய் நடக்காது!" இப்படி இழுத்துக்கொண்டே சேகர் கூறியதும் நடராஜனுக்கு முகம் சிவந்தது முகத்திலே கோபக்குறி தென்பட்டது. தம்பி! தந்தை இறக்கும்போது கேட்டுக்கொண்ட வேண்டுகோளை மறந்தாயா?" இல்லை அண்ணா! நடப்பைச் சொன்னேன்; பின் உங்கள் இஷ்டம்,"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/39&oldid=1741001" இலிருந்து மீள்விக்கப்பட்டது