உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தையின் ஆணை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தந்தையின் ஆணை 'நான் சொல்வதையாவது கேளேன். ஒரு நாலைஞ்சி வருஷம் சேகர் சம்பளத்திற்கு வேலை செய்யட்டுமே! நடராஜன் கண்கள் சிவந்தன. குப்பென்று வியர்த் தது; கோபத்தோடு தாயை விழித்துப் பார்த்தான். அம்மா! சம்பளத்துக்கு வேலை செய்ய நான் சேகரை டாக்டராக்கவில்லை. சம்பளத்துக்கு வேலைக்குப் போக அவன் பத்தாவதுவரை படித்தாலே போதும் ! ரூபாய் ஐயாயிரம் வரை செலவு செய்து அவனை ஏன் படிக்கவைத்தேன்? என் தந்தையின் கனவு நனவாக வேண்டும்." இப்படி ஆத்திரமாக கூறினான் நடராஜன்; ஆனா லும் அவன் தாய் நிதானத்தோடுதான் பேசினாள். "நடராஜா! நீ சொல்வது சரிதான். ஆனால் - பணம் இல்லாமல் உன் ஆசை எப்படி நிறைவேறும் இந்த வீட்டை விற்றாகிலும் இந்த கிராமத்தில் ஆஸ்பத்திரி வைப்பேன். கொதிப்பாகவே இந்த பதிலை கொட்டினான் நடரா ஜன். ஆனால் அவன் தாயின் கண்கள் கலங்கின, நீர் சொரிந்தன. பூர்வீக வீட்டையா? இதையும் இழந்து நடுத்தெரு வில் நிற்கவா? அழுதுகொண்டே வள்ளியம்மாள் கேட்டாள். தாயின் அழுகையை பார்த்தும் நடராஜன் மனம் இளக வில்லை. 4+ அம்மா ! என்னை தனியேவிட்டு பேசாமல் செல் லுங்கள்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/43&oldid=1741005" இலிருந்து மீள்விக்கப்பட்டது