ஆசைத்தம்பி 41 திரும்பிவர ஆசீர்வதித்தாள். ஆனால் பழைய பாக்கியே ரூபாய் ஐந்தாயிரத்துக்கு மேல் இருப்பதாகவும், இனி ஒரு பைசா கூட தாமுடியாது என்றும் மார்வாடி. சொல்லி விட்டான். 14. இனி ஏது செய்வேன் வேறு வழியின்றி வேதனையோடு நடராஜன் வீடு திரும்பினான். தான் கண்ட கனவு ஒரே வினாடியில் தகர்த்தெறியப்பட்டதை நினைக்க நினைக்க அவன் தலை சுழல ஆரம்பித்தது. . சோர்ந்து போய் சோபாவிலே சாய்ந்தான். பணம் இல்லாமல் எப்படி ஆஸ்பத்திரி வைப்பது? தன் தம்பி டாக்டராகியும் சர்க்கார் ஆஸ்பத்திரிக்குத்தான் செல்ல வேண்டுமா? தந்தையின் ஆசை நிறைவேறாதா! இனி என்ன செய்வது? அவன் மனம் குழம்பியது. ‘'நடராஜா! என்ன ஒரு மாதிரியாய் படுத்து விட் டாய்? மார்வாடி என்ன சொன்னான்?" இப்படி அவன் தாய் கேட்டாள். நடராஜன் மெளனமாக இருந்தான். அவன் என்ன தான் பதில் சொல்ல முடியும்? அவன் மௌனத்தில் இருந்து பணம் கிடைக்கவில்லை என்று அவன் தாய் வள்ளியம்மாள் உணர்ந்துகொண்டாள். "என்னதான் மார்வாரி சொன்னான் ? "நாம் கொடுக்கவேண்டியதே ரூபாய் ஐயாயிரத் துக்கு மேல் இருக்கிறதாம் ! 'பணத்திற்கு இனி என்ன செய்வது? 'அதைத்தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.'
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/42
Appearance