40 14 தந்தையின் ஆணை 'இதோ எண்ணிக்கொள் ரூபாய் ஐயாயிரம்!" று . நடராஜனின் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. மார்வாடியிடம் நூறு ரூபாய் நோட்டுகளாக வாங்கி எண்ண ஆரம்பித்தான். "பணம் சரியாய் இருக்கிற தைய்யா" என்று சொல்லி, மார்வாடியிடம் விடைபெற்று வீட்டுக்கு வந்த நடராஜன், தன் தாயாரிடமும். மற்றவர் களிடமும் கூறி ஆனந்தமாக சிரித்தான். அப்புறம் தன் தம்பி சேகரோடு ஆஸ்பத்திரிக்கு வேண்டிய சாமான்கள் வாங்க, மதுரை, சென்னை ஆகிய இடங்களுக்கு சென்று திரும்பினான். ஆஸ்பத்திரியும் ஓரளவு முடிந்தது. தன் தம்பி டாக்டராகவும், லீலா நர்சாகவும் எல்லோருக்கும் பணி செய்தார்கள். கிராம மக்கள் அனைவரும் "தேவ ராஜர் வாழ்க - அவர் பிள்ளைகள் வாழ்க-டாக்டர் சேகர் வாழ்க என்று கோஷமிட்டு ஊர்வலம் வந்தனர். அதைப் பார்க்கப் பார்க்க நடராஜனுக்கு ஒரே ஆனந்தம்." 1" - . அப்போது “நடராஜா ! சாப்பிட வாப்பா !" என்று வள்ளியம்மாள் கூப்பிட்டாள்; சோபாவில் படுத்திருந்த நடராஜன் திடுக்கிட்டு எழுந்தான். இத்தனையும் நேரம் கனவா கண்டோம் ?"-இப்படி எண்ணிய அவன் மனம் பெருமூச்சுவிட்டது. கனவாய் இருந்தால் என்ன? அதையும் கண்முன் நடத்தி காட்ட முடியாதா? மார்வாடி யிடம் பணம் வாங்கினால்.... எல்லா வேலையும் எளிதில் முடிந்துவிடும்.. என்று திடம் செய்துகொண்டு சாப்பிடச் சென்றான். நடராஜன். . .. சாப்பாடு முடிந்ததும், தன் தாய் வள்ளியம்மாளிடம் விபரம் பூராவையும் கூறி. மார்வாடியைப் பார்க்க நடராஜன் புறப்பட்டான். தாயாரும் வெற்றியோடு
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/41
Appearance